மகத்தான ஊழியக்காரனாகிய மோசே THIS GREAT SERVANT, MOSES 55-01-22 பிலதெல்பியா சபை, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா 1. சகோதரன் உட் அவர்களே, அங்கே கடைசியில் உம்முடைய மகன் தான் உட்கார்ந்து கொண்டிருப்பதாக முதலில் நினைத்து விட்டேன், அங்கே அந்த சீமாட்டி எழுதிக் கொண்டு இருந்தார்கள், ஆனால் அதுவாக இருக்கவில்லை. நான் என்னுடைய கண்களைத் திறந்த போது, கர்த்தருடைய தூதனானவர் அங்கே தொங்கிக் கொண்டிருந்தார். டேவிட் தான் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்று நான் நினைத்தேன். ஆனால் அது டேவிட் அல்ல, நான் அப்படி நினைக்கவில்லை. நீ டேவிட் உட் இல்லை, அப்படித் தானே-? சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் நீ நிச்சயமாகவே அவனுக்கு ஒரு இரட்டை சகோதரன் போன்று காணப்படுகிறாய். அது டேவிட் உட் அல்ல. ஏதோவொன்று செய்யப்பட்டதை சற்று முன்பு நான் கண்டேன். ஆமென். ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது. கர்த்தருடைய வழிகள் ஆராயப்படாதவைகள், அவ்வாறு இல்லையா-? ஆமென். ‘உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கைகூடும்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். சரி, நாம் வார்த்தையைத் திறக்கப் போகிறோம். நான் அதை அப்படியே எனக்குள்ளேயே வைத்திருப்பேன் என்று நம்புகிறேன், ஓ, அவசியமென்று அவர் காண்கையில், கர்த்தரே அதை வெளிப்படுத்தட்டும். 2. இப்பொழுது, துரிதமாக, எண்ணாகமம் புஸ்தகம் 20-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். கர்த்தருக்குச் சித்தமானால், இந்த செய்திக்காக ஏறக்குறைய இருபது நிமிடங்களை எடுத்துக் கொள்ள முயற்சிப்போம். இப்பொழுது, நீங்கள் ஆயத்தமாயிருங்கள். இப்பொழுது என்ன சம்பவிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. கர்த்தராகிய இயேசு நமக்காக எதையும் செய்யலாம். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? அப்படியானால், ‘ஆமென்’ என்று கூறுங்கள். [சபையார், ‘ஆமென்’ என்கின்றனர் - ஆசிரியர்.] இப்பொழுது, ‘ஆமென்’ என்ற வார்த்தைக்கு ‘அப்படியே ஆகக்கடவது’ என்று அர்த்தம். புரிகிறதா-? இப்பொழுது, நாம் உண்மையாகவே அவரை நேசிக்கிறோம். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக் கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடி வரச் செய்து,... கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; (இப்படி) நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப் பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளை இட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். (எண்ணாகமம் 20:7-9) இப்பொழுது, நான் சற்றுநேரம் இந்த ‘மகத்தான ஊழியக்காரனாகிய மோசே’ என்பதன் பேரில் பேச விரும்புகிறேன். 3. அங்கே உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த சகோதரியே, நீங்கள் எந்தவகையிலாவது நலமாக உணருகிறீர்களா-? அந்தச் சிறு சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது மிகவும் நன்றாக உணருகிறீர்கள், இல்லையா-? சீமாட்டியே, நீங்கள் குணம் அடைந்து விட்டீர்கள். உங்களைத் தொல்லைப்படுத்தி வந்த அந்தப் பழைய இருதயக் கோளாறும் மற்றும் காரியங்களும், சிறுநீரகக் கோளாறும், அதோடு கூட வீங்கிப் பருத்து வலிக்கிற நரம்புகளும் உங்களைத் தொல்லைப்படுத்தி வந்தன. அது சரி அல்லவா-? அது சரி என்றால், உங்கள் கரத்தை அசைத்துக் காட்டுங்கள். அப்போதே நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள். ஆமென். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. நான் சுற்றும் முற்றும் அவர்களை நோக்கிப் பார்த்து, சற்று முன்பு அவர்களைக் கண்டேன், அவர்கள் மிகவும் துன்பத்தோடு இருப்பதாகக் காணப்பட்டார்கள், நான் திரும்பிப் பார்க்க நேர்ந்தது, அப்போது தூதனானவர் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அது அதிகமாக டேவிட்டைப் போன்றே காணப்பட்டது. நீங்கள் இங்கேயிருக்கும் திரு. உட் அவர்களை சந்திக்க வேண்டும். இவர் அவருடைய மகனைப் போன்றே காணப்பட்டார், இவர் அதிகமாக அவனைப் போலவே இருந்தார். நான் திரும்பிப் பார்த்து, ‘அது ஒருக்கால் டேவிட்டாக இருக்குமோ’ என்று நினைத்தேன், ஏனென்றால் டேவிட் என்னை நேசித்து என்னை நம்புகிறவன் என்பது எனக்குத் தெரியும். அதன் பிறகு நான் கீழே நோக்கிப் பார்த்தேன், அது அந்தச் சிறு சீமாட்டியின் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கு என்ன கோளாறு என்று கண்டேன். திடீரென்று நான் திரும்பிப் பார்த்தேன், அப்போது அவர்கள் புன்முறுவலோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான், ‘நான் இதை நன்கு அவர்களிடம் சொல்லியாக வேண்டும், அது முடிந்து விட்டது என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அப்பொழுது அவர்களால்... கூடும்’ என்று எண்ணினேன். ஆமென். அவர்கள் நான் (பேசினவற்றிலிருந்து) குறிப்புகளையோ அல்லது அங்கே எதையோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள். சரி. ஓ, அவர் அற்புதமானவர் இல்லையா-? அது அப்படியே அவ்விதமாகத்தான் கிரியை செய்கிறது. அப்படியே அந்தவிதமாகத் தான் அது கிரியை செய்கிறது. அப்படியே... உங்களால் முடியாது - உங்களால் அவரைத் தோற்கடிக்க முடியாது. நமக்காக உதவி செய்யவே அவர் இங்கே இருக்கிறார். 4. இப்பொழுது, கர்த்தர் சொன்னார், நாம் - கோலை எடுத்துக் கொள்ளும்படி அவர் மோசேயிடம் சொன்னார். இப்பொழுது, நாம் அந்தக் கோலின் பேரில் பேச விரும்புகிறோம், கோலானது நியாயத்தீர்ப்பு சம்பந்தப்பட்டது. மோசேயைக் குறித்துப் பேசுவது எனக்குப் பிடிக்கும். அவன், ஆசாரியனாகவும், இராஜாவாகவும், நியாயப்பிரமாணத்தை கொடுத்தவனாகவும் இருந்தான்; மோசே எப்படி இருந்தானோ அவை எல்லாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருக்கிறது. அவன் அழகுள்ள பிள்ளையாக இந்த உலகத்தில் பிறந்தான். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவன் ஒரு தீர்க்கதரிசியாகப் பிறந்தான். அவர்கள் தேவனைக் கண்ட... போது, அவர்கள் இராஜாவுக்குப் பயப்படவில்லை. மோசே பிறந்த போது, எவ்விதமான ஒரு-ஒரு காரியம் சம்பவித்தது. அது பதிவு செய்து வைக்கப்படவில்லை, ஆனால் மோசே பிறந்த போது, ஏதோவொன்று சம்பவித்தது, ஏனென்றால் அவனுடைய பெற்றோர்கள் அதைக் கண்டு, இராஜா சொன்னதற்கு தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்று அறிந்து கொண்டனர். அவர்களுடைய மகன் பாதுகாக்கப்படப் போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அவர்கள் பயப்படவில்லை. 5. இப்படி அவன் நாணல் செடியிலிருந்து எடுக்கப்பட்டு, சரியாக அதைக் கொண்டே வளர்க்கப்பட்டான், அப்படியே ஒவ்வொரு விதத்திலும்: அவன் வனாந்தரத்திற்குள் போய், இஸ்ரவேல் புத்திரர்களை வழிநடத்தினான்: அவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவன், அவன் ஒரு ஆசாரியன், கிறிஸ்து எப்படி இருந்தாரோ அவ்விதமே அவன் எல்லாவிதத்திலும் இருந்தான். அவன் முன்னடையாளமாக இருந்தான், கிறிஸ்து அதற்கு ஒப்புமையாக இருந்தார். இப்பொழுது, மோசேயை நாம் கவனிப்போமானால், அவனுக்கு ஏறக்குறைய 40 வயதான போது, அவன் பார்வோனுடைய குமாரத்தியின் (மகன்) என்று சொல்லப்படுவதை புறக்கணித்து விட்டான்... மோசேயினுடைய ஜீவியம் சுழற்சியாக, மூன்று சுழற்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது; முதலாவது நாற்பது வயது; அடுத்து, எண்பது வயது; அதன்பிறகு அவன் மரிக்கும் போது, 120 வயது, அப்படியே பரிபூரணமாக உள்ளது... நான் வேத வாக்கியத்தை ஆராய்ந்து பார்த்து, கிருபையின் யுகம், ஜலம், இரத்தம், ஆவி, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், கிறிஸ்துவினுடைய முதலாவது, இரண்டாவது, மற்றும் மூன்றாவது வருகைகளை என்னால் காண்பிக்க முடியும். நீங்கள் பொருத்திக்காட்ட விரும்பும் ஒவ்வொன்றும், சரியாக வைக்கப்பட்டு... மற்றும் வேத வாக்கியத்தில் உள்ள ஒவ்வொன்றும் சரியாக அவைகளுக்குள் - அப்படியே அதைப் போன்று அந்த எழுத்துக்களுக்குள் சுழன்று போய்க் கொண்டே இருக்கும். 6. இப்பொழுது, மோசே, அவன்... முதலாவது 40 வருடங்களில், அவன் கல்வி கற்றான்... மோசேயுடைய ஆசிரியர் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்-? அவனுடைய தாய் தான். எந்த சிறந்த (ஆசிரியரையும்) அவனால் கொண்டிருக்க முடியவில்லை, ஏனென்றால் தன்னுடைய சொந்த பிள்ளையையே வளர்ப்பதற்கு அவள் ஒரு உபாத்தியாயினியாக வாடகைக்கு அமர்த்தப்பட்டாள். தேவன் நிச்சயமாக அங்கே சாத்தான் மேல் ஒன்றைக் கொண்டு வருகிறார் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், இல்லையா-? அவர் நிச்சயமாக அதைச் செய்தார். இப்பொழுது, மோசே தன்னை வளர்த்து வந்த தன்னுடைய தாயிடமிருந்து அறிந்து கொண்டான்... அவள் ஒரு ஆவிக்குரிய பெண்ணாக இருந்தாள், அவளைக் குறித்து கொஞ்சமே கூறப்பட்டுள்ளது, ஆனால் சகோதரனே, அவள் மகிமையில் தன்னுடைய கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, (ஆம், ஐயா) என்ன நடக்கும் என்று காண விரும்புகிறேன். அந்த சத்துருவின் மத்தியிலும் அவள் எப்படியாக அந்தச் சிறு பிள்ளைக்குக் கற்றுக் கொடுத்தாள், சரியாக அங்கே இருந்த அந்த வெப்பம் நிறைந்த உலையில் வைத்து அதைச் செய்தாளே. தேவனுடைய பிள்ளைகளை அந்த இடத்தை விட்டு விடுவிக்கிறவன் அவன் தான் என்று அவள் அவனிடம் கூறினாள். 7. மோசே கற்றறிந்த ஒரு பண்டிதனாக இருந்து அதை அறிந்து, ‘நான் வெளியே போய் அந்தக் காரியத்தை ஒழுங்குபடுத்துவேன் என்று நினைக்கிறேன்’ என்று கூறினான். இப்படியிருக்க அவனுக்கு 40 வயதாக இருந்தது, எனவே அவன், ‘நான் அதைச் செய்வதற்கு போதுமான வயதை அடைந்து கொண்டிருக்கிறேன்’ என்று நினைத்தான். எனவே அவன் அந்தக் காரியத்தை தன்னுடைய சொந்தக் கரத்தில் எடுத்துக் கொண்ட போது, தோல்வியடைந்தான். நாம் காரியத்தை நம்முடைய கரங்களில் எடுக்கும் ஒவ்வொரு தடவையும், நாம் தோல்வி அடையத் தான் போகிறோம். கர்த்தர் வழி நடத்துகிறபடியே நீங்கள் போங்கள். கர்த்தர் என்ன செய்யச் சொல்லுகிறாரோ, பிறகு நீங்கள் அதைச் செய்யுங்கள், அப்போது ஒரு போதும் தோல்வியடைவே மாட்டீர்கள். உங்களால் தோற்றுப்போக முடியாது, ஏனென்றால் நீங்கள் கர்த்தருடைய வழி நடத்துதலைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். மோசே மாத்திரம் சற்று காத்திருந்து, காரியங்கள் கனிந்து பழுத்து பூரணமாகும்படி விட்டிருந்து, அந்தக் காரியம் அந்தப் பருவ காலத்தை அடையும்படி... அனுமதித்திருந்தால். நீங்கள் சோளப்பயிரை இப்பொழுது நடவு செய்து விட்டு, வெளியே போய், ஒரு மணி நேரத்தில் அதை (அறுவடை) செய்து சேகரிக்க முடியாது. நீங்கள் அதை அங்கேயே கிடக்கும்படி விட வேண்டும், அந்த விதை செத்து, அழுகிப் போய், புது ஜீவனானது இளவேனிற்காலத்தில் அந்தச் சோளப்பயிரில் வளர்ந்து வர வேண்டியுள்ளது. இப்பொழுது நாம் அந்தவிதமாகத்தான் செய்கிறோம். நாம் ஜனங்களுடைய இருதயங்களில் விதையை விதைத்துக் கொண்டிருக்கிறோம், பிறகு இந்த மகத்தான அறுவடை காலம் வரும்போது, (நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா-?), அது-அது உருவெடுத்து, ஒரு மகத்தான காரியம் சம்பவிக்கும். 8. இப்பொழுது, மோசே அந்தச் சூழ்நிலையை தன்னுடைய சொந்த கரத்தில் எடுத்துக்கொண்ட பிறகு, அவன் முழுவதும் தோல்வியடைந்ததைக் கண்டு கொண்டு, பார்வோனுடைய சமூகத்தை விட்டும், தேவனுடைய சமூகத்தை விட்டும் ஓடி, பின்புறத்தில் 40 வருடங்கள் அந்நியனாய் இருந்தான். அப்போது அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை விவாகம் பண்ணினான். இப்படியிருக்க அவளோ அதிக கோபக்காரியாக இருந்தாள். மோசேயும் அதிக கோபக்காரனாக இருந்தான். அது அவனுடைய பிரச்சனையாக இருந்தது. அந்நேரங்களில் அங்கே அந்த வனாந்தரத்தின் பின்புறத்தில், காரியங்கள் மிகவும் சமாதானமாக இருந்திருக்காது என்பதை நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். ஆனால் தேவன் அதை அவனுக்குக் கொடுத்தார். 9. இப்பொழுது, கொஞ்சம் கோபக்காரியான ஒரு பெண்ணை நீங்கள் விவாகம் பண்ணி இருப்பதாக நீங்கள் நினைத்தால், தேவன் ஒருக்கால் உங்களை சற்று கீழே பழக்கப்படுத்தி பணிய வைத்து வழிக்குக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கலாம், (நீங்கள் பாருங்கள்-?), இப்படியே, கோபக்கார மனிதனை விவாகம் பண்ணியிருக்கிற ஒரு பெண்ணின் விஷயத்திலும் இதே காரியம் தான். (யாத். 4:25,26) எனவே சிப்போரா ஒரு விதத்தில் அதிக கோபக்கார பெண்ணாக இருந்தாள். அவள் தன்னுடைய மகனுடைய நுனித்தோலை வெட்டி, அதை மோசேக்கு முன்பாக எறிந்து, ‘நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்’ என்று கூறின போது அவள் அதை நிரூபித்தாள். என்னே, அந்நேரங்களில் காரியங்கள் மிகவும் சமாதானமாய் இருந்திருக்காது என்பதை கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். அப்போது அங்கே வெளியே பின்புறத்தில், தேவன்... அவர் என்ன செய்து கொண்டிருந்தார்-? அந்தப் பையனுடைய மனதிற்குள், அல்லது அந்த மனிதனுடைய மனதுக்குள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார், தேவனுடைய திட்டம் எப்படிப்பட்டது. மோசே அங்கே பின்னால் காத்துக் கொண்டிருந்தான், மேலும் இப்பொழுது... அங்கே அவன் இருந்தான். அவன் என்ன செய்தான்-? அவன் தன்னுடைய மாமனாகிய எத்திரோவுக்காக வேலை செய்யப் போனான், அவன் வெளியே அந்த வனாந்தரமான இடத்தில் தன்னுடைய மாமனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். தேவனோடுள்ள ஐக்கியத்தை விட்டு வெளியே இருக்கும் ஒரு விசுவாசியினுடைய ஒரு பரிபூரண காட்சியாக அது இன்றிரவு இங்கே நமக்கு முன்பாக இருக்கிறது. 10. அங்கே அவன் ஐக்கியம் எதுவுமின்றி இருந்தான், அந்த 40 வருடங்கள் தேவன் அவனிடம் ஒரு காரியத்தையும் பேசவில்லை, அல்லது எந்த விதத்திலும், இயற்கைக்கு மேம்பட்ட எந்தவிதத்திலும் தேவன் அவனிடம் பேசவில்லை. அவன் ஐக்கியத்திற்கு வெளியே இருந்தான். சபையானது தேவனுடைய ஐக்கியத்தை விட்டு வெளியே இருக்கும் போது, அற்புதங்கள் முடிந்து விடும், அடையாளங்களும் அற்புதங்களும் முடிவுக்கு வந்து விடும், எழுப்புதல்களும் நின்று விடும்; நீங்கள் ஐக்கியத்தை விட்டு வெளியே போகும் போது, தேவனும் சரியாக வெளியே போய் விடுகிறார். செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், (சிறிது நேரத்திற்கு முன்பு அதைத்தான் நான் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன்), தேவனுடைய அன்பை உங்களுடைய இருதயத்திற்குள் வைத்திருப்பது தான். அவரோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளுங்கள், நாம் நன்கு வளர்ந்து முதிர்ச்சியடைகையில், அப்போது அவர் இந்த மற்ற காரியங்களையும் கூட்டிக் கொடுப்பார். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா-? இப்படியாக, மோசே, ஐக்கியத்திற்கு வெளியே இருந்தான், அவன் எந்த ஐக்கியமும் இல்லாமல் - அங்கே வெளியே ஒரு அந்நிய தேசத்தில், அந்நியர்களின் மத்தியில் இருந்தான், அவர்கள் அவனுடைய சொந்த ஜனங்களல்ல... அவள் அவருடைய ஜனங்... அங்கிருந்த அந்த ஜனங்கள் எத்தியோப்பியர்களாக இருந்தார்கள், அவனோ ஒரு யூதனாய் இருந்தான். அங்கே, வெளித் தோற்றத்தில், அவன் முற்றிலுமாக தேவனிடம் வந்து சேர்வதற்கு வெளியே இருந்தான், தேவனோ எல்லா நேரத்தையும் அறிந்தவராய் இருக்கிறார், தேவன் - மனிதன் தேவனுடைய திட்டத்தை விட்டு வெளியேறச் செய்கிற ஒரு குழப்பமான நிலையை அவன் எவ்வளவாகக் கொண்டிருந்தாலும் காரியமில்லை, தேவன் அதை நேராக்கத் தான் போகிறார். அது சரியே. 11. எனவே, தேவனுக்கு முன்பாக, மாசற்றதும் குற்றமில்லாததும், குறையற்றதுமான ஒரு சபையானது இருக்கத்தான் போகிறது என்பது தெரிந்தது தான். தேவன் அதைச் செய்யப் போகிறார். நான் சத்தியத்தைப் பிரசங்கம் பண்ணத் தவறினாலும், சகோதரன் ஜோசப் அவர்களோ அங்கே வெளியிலுள்ள சகோதரர்களாகிய நீங்களோ சத்தியத்தைப் பிரசங்கிக்கத் தவறினாலும், ‘தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழுப்ப வல்லவராயிருக்கிறார்.’ அவர்... யாராவது ஒருவர் பிரசங்கம் பண்ணி, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடத்தான் போகிறார்கள். யாரோ ஒருவர் சபையை இழுக்கத் தான் போகிறார். அது சரியே. எனவே காட்சியானது எவ்வளவாக கெட்டு அழிந்து போனாலும் அது காரியமில்லை, மோசே என்ன செய்திருந்தானோ அதைச் சரிப்படுத்துவதற்காக தேவனுக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது, அவர் ஏறக்குறைய மூன்று நாட்களில் அந்தக் காட்சியை மறுபடியும் நேராக்கி விட்டார். அவர் மோசேயை எடுத்து, அவனை இங்கே வெளியே வைத்து, அன்போடு அவனை நேராக்குவதற்காக அதிக கோபமுள்ள மனைவியை அவனுக்குக் கொடுத்து, தேவன் இங்கே வந்து மறுபடியுமாக அந்தக் காட்சியை சரிப்படுத்திக் கொண்டிருந்தார், அவர் அதைச் சரிப்படுத்தும் வரையில் அதைச் செய்தார். ஆனால் அவர் அதைச் செய்யப் போகிறார் என்று தாம் தீர்மானம் பண்ணி, அவ்வாறு செய்யும்படியாக அவர் மோசேயை நியமித்தார். ஓ, எனக்கு அது பிடிக்கும். 12. அவர்... தேவன் தீர்மானம் பண்ணினது தான் சம்பவிக்கப் போகிறது. ஓ, அது ஒரு அற்புதமான உணர்வை உங்களுக்குக் கொடுக்கவில்லையா-? தேவன் என்ன தீர்மானித்து இருக்கிறாரோ அதுவே சம்பவிக்க வேண்டும். அது சரியே. அவர் எப்படியும் அதைச் செய்யத் தான் போகிறார். எனவே தேவன் தம்முடைய காட்சியை திரும்பச் சரி செய்து கொண்டிருப்பதாக, நம்மால் காணக் கூடிய ஒரு நேரம் எப்படிப்பட்ட ஒரு நேரம். ஒரு நாள், மோசே தேவனோடுள்ள ஐக்கியத்திற்கு வெளியே இருக்கையில், அநேகமாக அவன், ‘நல்லது, எப்பொழுதாவது இஸ்ரவேல் புத்திரர்களை விடுவிக்கும்படியான அந்தத் தரிசனம் எல்லாம் கடந்து போய் விட்டது. நான் இங்கேயுள்ள இந்த வனாந்தரத்திலேயே வாழ்ந்து பின்பு மரித்துப் போவேன் என்று நினைக்கிறேன், அங்கே அதற்கு இருப்பதெல்லாம் அவ்வளவு தான். நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன்’ என்று நினைத்திருப்பான், அல்லது அநேகமாக அங்கே சுற்றி நடந்து வந்திருப்பான். அவன் தன்னுடைய கரத்தில் ஒரு கோலை வைத்திருந்தான். அவன் நெடுக நடந்து போய்க் கொண்டிருந்த போது, தேவன் எரிகிற முட்செடியில் ஒரு... ஒரு தூதனானவருடைய வடிவில் தோன்றினார். மோசே அதைக் கண்டான். அவன், ‘இப்பொழுது, இங்கே வெளிப்புறத்தில் பின்பகுதியில், அங்கே என்னைத் தவிர வேறு எந்த மேய்ப்பர்களும் இல்லையே, அந்த முட்செடி ஏன் பற்றியெரிகிறது என்று ஆச்சரியமாக உள்ளதே. யாராவது இங்கே ரகசியமாக நழுவி வந்து, இந்த முட்செடியில் நெருப்பு பற்ற வைத்திருப்பார்களோ-?’ என்று சொல்லுவதை நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். அவன் அதைக் கவனித்தான், அவன் அதை நோக்கிப் பார்த்தான், அது...தேவன் ஏதோவொரு விதத்தில் உங்கள் கவனத்தைக் கவர்ந்து கொள்ளும்படியான ஒரு வழியை உடையவராயிருக்கிறார், இல்லையா-? 13. அவர் ஒருநாள் யவீருவின் கவனத்தைக் கவர்ந்தார். சிறிய யவீருக்கு தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் இல்லாத போது. அவன் அதை விசுவாசித்தான்; அவர் யவீருவின் இருதயத்தை விரும்பினார், எனவே அவர் அப்படியே... அவர் செய்யக் கூடியதாக இருந்த ஒரே காரியம் என்ன வென்றால், அவனுடைய மகளை அடிப்பது தான், அவள் மரிக்கட்டும், அப்போது தான் இயேசு வந்து, மறுபடியும் அவளை உயரோடெழுப்பி, உண்மையாகவே அவனுடைய கவனத்தைக் கவர்ந்து கொள்ளலாம். உங்களுக்குப் புரிகிறதா-? தேவன் அவ்வாறு செய்கிறார். சில சமயங்களில் படுக்கையில் அவர் உங்களைப் போட்டு விடுகிறார், சில சமயம் வியாதிப்படலாம், அப்போது தான் நீங்கள் உணர்ந்து கொள்ளும் விதமாக உங்களை மேலே நோக்கிப் பார்க்க வைக்கும்படி அவரால் செய்ய முடியும். பழங்கால மேய்ப்பனுடைய கதைகளைப் போல... அவனுக்கு ஒரு ஆடு இருந்தது, அவர்கள் அதனுடைய காலை முறித்து விட்டனர். அவன், ‘இந்த ஆடு எப்படி அதனுடைய காலை முறித்துக் கொண்டது-?’ என்று கேட்டான். அவர், ‘நான் தான் அதனுடைய காலை முறித்தேன்’ என்றார். ‘ஏன், உம்முடைய சொந்த ஆட்டினுடைய காலையே முறித்துப் போடும்படிக்கு நீர் ஒரு கொடூரமான மேய்ப்பராக இருக்கிறீரே’ என்றார். 14. ‘இல்லை. அது என்னைப் பொருட்படுத்துவதே இல்லை, பிறகு நான் அதைச் சுற்றி கட்டி, அதற்கு சற்று அன்பு காட்டி, அதற்கு சில விசேஷமான ஆகாரத்தைக் கொடுக்க வேண்டுமானால், நான் அதனுடைய காலை ஒடிக்க வேண்டியிருந்தது, அப்போது தான் அது என்னை நேசித்து, என்னைப் பின்பற்றி வரும்’ என்றானாம். தேவனும் சில நேரங்களில் அந்த விதமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது: ஒருவிதத்தில் நம்மை உடைத்துப் போடுகிறார், சில நேரங்களில் சிறிது கூடுதல் ஆகாரத்தை நமக்குக் கொடுக்கும்படி அப்படி செய்கிறார், உங்களுக்குத் தெரியும், ஒரு விதத்தில் சற்றே நம்மை நேசிக்கவும் அவ்வாறு செய்கிறார். நான் இன்றிரவு ஒரு சுவிசேஷ பிரசங்கியாராய் இருப்பதற்கு சரியாக அது தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா, ஏனென்றால் வியாதிப்பட்டு, நான் பிழைக்க முடியாது என்று மருத்துவர் கூறின நேரத்தில் அவர் என்னைப் பார்க்க வந்தார். அது முற்றிலும் சரியே. அது என்னை மாற்றினது, என்னை அசைத்தது. ஒரு பிரசங்கி என்ற சிந்தனையையே நான் வெறுத்தேன். ஒரு முறை நான்-இருக்கையில், நான் ஒருவகை குத்துச்சண்டை போட்டியை உடையவனாய் இருந்த போது, அந்த மனிதன், ‘சொல்’ என்றான். அவன் ஒரு நீலநிற கோட்டை அணிந்திருந்தான். அவன், ‘நீ இந்தச் சிறு பாப்டிஸ்டு பிரசங்கிமார்களில் ஒருவரைப் போலவே காணப்படுகிறாய்’ என்றான். 15. அதற்கு நான், ‘இதோ பார் மனிதா, நீ அதைச் சொல்லும் போதே சிரிக்கிறாய். நான் என்னுடைய கூட்டாளியோடு சண்டைக்குப் போக சரியாக அப்போதே ஆயத்தமாயிருந்தேன், என்னைக் குறித்து பிரசங்கியார் என்று சொல்லாதே’ என்றேன். தேவன் என்ன செய்தார் என்று பார்த்தீர்களா-? மருத்துவர்கள், ‘அதெல்லாம் முடிந்து விட்டது’ என்று கூறின போது, அவர் என்னுடைய முதுகின் மேல் என்னைக் கிடத்த வேண்டியிருந்தது. அப்போது அவர் சுற்றி வந்து, எனக்கு விசேஷமான ஒரு சிறு நடத்துதலைக் கொடுத்து, கனிவோடு எண்ணையை ஊற்றி, உங்களுக்குத் தெரியும், ‘இப்பொழுது, நான் உன்னை நேசிக்கிறேன்’ என்றார். நான், ‘ஆம், கர்த்தாவே. நானும் உம்மை நேசிக்கிறேன்’ என்றேன். எனவே, பிறகு நாங்கள் சிநேகிதர்களாக ஆனோம். சில சமயங்களில் இயேசு அவ்வாறு தான் செய்கிறார், அவர் கீலேயாத்தின் பிசின் தைலத்தில் கொஞ்சம் ஊற்ற வேண்டியிருக்கிறது, உங்களுக்குத் தெரியும், அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உங்களுக்குக் காண்பிக்கும் படியாக, கனிவோடே காரியங்களை ஆற்றுகிறார், அவர் உங்களைச் சுகமாக்குகிறார், நீங்கள் சுகமடைய அவர் விரும்புகிறார், நீங்கள் அவரை நேசித்து, அவரை சேவித்து, அவர் மேல் விசுவாசம் வைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர் அற்புதமானவர் இல்லையா-? அப்போது, அந்த விதமாகத்தான் அவர் அங்கே பின்புறத்திலிருந்த மோசேக்கும் செய்து கொண்டு இருந்தார். மோசே தன்னுடைய வழியை விட்டு விலகி, (கர்த்தர் அவனுடைய கவனத்தைக் கவர்ந்ததால்), அங்கே பின்னால் நோக்கிப் பார்த்து, அவன், ‘நல்லது இப்பொழுது, மோசே, ... என்று நீ இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன்’ என்று எண்ணினான். 16. பரிதாபமான, வயது சென்ற மோசே, தன்னுடைய நீண்ட வெண் தாடியும் மயிரும் உடையவனாய் அங்கே நொண்டி நொண்டி நெடுக போய்க் கொண்டிருப்பதை கர்த்தர் காண்பதாக நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். ‘நல்லது, பல வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிருந்தது, கர்த்தர் நிச்சயமாக இஸ்ரவேல் புத்திரர்களை விடுவிப்பார் என்று நான் நினைத்திருந்தேன், ஆனால் இப்பொழுதோ தேவன் எனக்கு புறமுதுகு காட்டி விட்டார். நான் இங்கே பின்னால் இதனோடு போராடிக் கொண்டிருக்கிறேன். எனவே நான் இவ்விதமாகவே தரித்திருக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.’ தேவனோ, ‘பரிதாபமான மனிதனே, நீ அதை உணரும்படி செய்ய வேண்டும் என்பதற்காகவே நான்-நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது... ஆனால் நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்பதை நான் உனக்குக் காண்பிக்கப் போகிறேன்’ என்று கூறுவதாக கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். எனவே அவர் அங்கே இருந்த அவனுடைய கவனத்தை கவர்ந்து கொண்டார். அவர் மோசேயோடு பேசும்படியான ஒரு தருணத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பினார். உங்களுக்குத் தெரியும், தேவன் சில சமயங்களில் உங்களை வியாதிப்பட வைக்கவும், உங்களை மருத்துவமனையில் வைக்கவும், அங்குள்ள மருத்துவர் உங்களை சந்திக்கும்படிக்கு நீங்கள் பிழைக்கப் போவதில்லை என்று கூறும்படி செய்யவும் வேண்டியவராய் இருக்கிறார். அப்போது நீங்கள் அதற்காகக் கூப்பிடுவீர்கள்; நீங்கள் கவலைப்பட வேண்டாம். மருத்துவர்... என்று கூறும் வரையில் அப்படியே காத்திருங்கள். ஓ, நீங்கள், ‘தெய்வீக சுகமளித்தலில் எனக்கு நம்பிக்கையில்லை, அப்படிப்பட்ட காரியமே கிடையாது. அந்தக் காரியம் முட்டாள்த் தனமானது’ என்று கூறலாம். எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று என்று மருத்துவர் கூறட்டும். அப்போது உங்களோடு பேசும்படியான ஒரு தருணத்தை தேவன் பெற்றுக் கொள்கிறார். எனவே கவலைப்பட வேண்டாம். அவர் காரியங்களைச் செய்வதற்கு ஒரு வழியை உடையவராய் இருக்கிறார். அவர் அதைத் தம்முடைய சொந்த வழியில் செய்கிறார். அல்லேலூயா. என்னே, அது மிகவும் சத்தமிடும் ஒரு மெதோடிஸ்டைப் போன்று இருப்பதாக என்னை உணரச் செய்கிறது. 17. கவனியுங்கள். காரணம் என்னவென்றால், தேவன் தான் அதைச் செய்கிறார். உங்களுக்குப் புரிகிறதா-? அவர் அப்படியே அதைத் தம்முடைய சொந்த வழியில் செய்கிறார். அவர் அப்படியே... காரியங்களைச் செய்வதற்கு அவர் ஒரு வழியை உடையவராயிருக்கிறார், அவர் அதை உடையவராய் இல்லையா-? அவர் ஒரு வழியை உடையவராய் இருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆமென். எனவே நாம் இப்பொழுது காண்கிறோம், மோசே, ‘இப்பொழுது, இது மிகவும் வினோதமான- வினோதமான ஒரு காட்சி’ என்று கூறினதின் மூலமாக, அவர்-அவர் மோசேயோடு பேச ஒரு வாய்ப்பை பெற்றுக் கொண்டார். தேவன் பேச ஒரு தருணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி சில சமயங்களில் காரியங்களை கனிவோடு வினோதமாகவே செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். அது சரியே. யாரோ ஒருவர் என்னிடம் வந்து, ‘ஏய், ஒரு பரிசுத்த உருளையனை அவர்கள் பெற்றிருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள், இன்றிரவு அவன் தான் இங்கே பிரசங்கம் பண்ணப் போகிறானாம். நான் போய், அவை எல்லாம் எதைப் பற்றியது என்று காண்பேன் என்று நம்புகிறேன்’ என்று சொன்னார். மில்டவுன் பாப்டிஸ்டு மேய்ப்பராகிய வில்லியம் ஹால் அவர்கள், அது இன்றிரவு மில்டவுன் பாப்டிஸ்டு சபையிருக்கிற என்னுடைய இடத்தில் தான் உள்ளது, ‘நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால், நீங்கள் இங்கு வர வேண்டும், இந்த மனிதர் பிரசங்கம் பண்ணுகிறார். அவர் ஒரு சிறிய பில்லி சண்டே’ என்று செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டு இருந்ததை அவர் கொண்டிருந்த காரணத்தினால் அம்மனிதர் வந்தார். 18. இதோ அவர் வந்தார், ஓ, அவர் ஒரு உயர்குடிமகனாக இருந்தார். அவருடைய தலைமயிர் கீழே அவர் முகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது, அவருடைய ஒரு பல் வெளியே தெரிந்தது, சோள காம்பு முனை கொண்ட ஒரு பெரிய புகைபிடிக்கும் பைப்பைக் வைத்திருந்தார், அவர் அதை இவ்விதமாக சபையின் பக்கத்தில் எறிந்து விட்டு, அவர் வெளியிலிருந்து அதைத் தட்டி, உள்ளே நடந்து வந்து, ‘அந்தச் சிறிய பில்லி சண்டே எங்கேயிருக்கிறார்-? நான் அவர் பேசுவதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறின போது. டீக்கன் சகோதரர்கள், ‘இப்பொழுது, திரு. ஹால் அவர்களே, அமருங்கள்’ என்றார்கள். அவர் ஒரு கடினமான வாடிக்கையாளராக இருந்தார். அதன் பிறகு அவர், ‘நான் ஒருக்கால் சற்று அருகில் நிற்பது நல்லது. பில்லி சண்டே யாரைப் போன்று இருக்கிறார் என்று காண விரும்புகிறேன்’ என்றார், அவர் அவ்வாறு சொல்லியபடி, கேலி செய்து கொண்டிருந்தார். உங்களுக்குப் புரிகிறதா-? அந்த இரவில், அவர் இரட்சிக்கப்பட்டார். ஆமென். இன்றிரவு அவர் அங்கே அந்த அதே சபையில் மேய்ப்பராக இருக்கிறார். 19. பாருங்கள்-? உங்களைக் கவரும்படி தேவன் ஒரு வழியை உடையவராயிருக்கிறார், இல்லையா-? அவர் ஒருமுறை உங்களை ஒரு பக்கமாய் தனிமையாக கொண்டு செல்வார். இப்படியிருக்க அவர், ‘இப்பொழுது, இது மோசேக்கு சற்று வினோதமானதாக தோன்றும், வழக்கத்திற்கு மாறான ஏதோவொன்றாக இருக்கும். எனவே நான் அப்படியே இந்த அக்கினி ஸ்தம்பத்தை அங்கேயுள்ள அந்த முட்செடியில் அனுப்புவேன், அது... ஏனென்றால் இது அவனை வனாந்தரம் முழுவதும் எப்படியும் வழிநடத்தப் போகிறது. எனவே அது பற்றியெரிய ஆரம்பிக்கும்படி செய்து, மோசேயை இங்கே வரச்செய்வேன்’ என்றார். எனவே அவர் மோசேயின் கவனத்தைக் கவர்ந்து கொண்டார். இப்படியாக அவன் சற்று அருகில் வந்து, உங்களுக்குத் தெரியும், ‘நல்லது, அது வினோதமாகத் தெரிகிறதே. அந்தக் காரியம் எரிந்து (வெந்து) போகவில்லையே’ என்றான். அவன் போதுமான அளவு அருகில், பேசுகிற சத்தத்தைக் கேட்கும் அளவு தூரத்திற்கு வந்த போது... ஓ, நான் அங்கே போக விரும்புகிறேன், நீங்களும் பேசுகிற சத்தத்தைக் கேட்கும் அளவு தூரத்திற்குப் போக விரும்ப வில்லையா-? பேசுகிற சத்தத்தைக் கேட்கும் அளவு தூரத்திற்கு வாருங்கள்... அவர், ‘மோசே’ என்றார். அவன், ‘ஆம், கர்த்தாவே-? இதோ அடியேன்’ என்றான். ‘இப்பொழுது உன்னுடைய பாதரட்சைகளைக் கழற்றிப் போடு. நீ பரிசுத்த பூமியில் இருக்கிறாய்.’ எனவே மோசே தன்னுடைய பாதரட்சைகளைக் அவிழ்த்து கழற்றிப் போட்டு விட்டு, சற்று அருகில் நடந்து வந்து, ‘என்ன, கர்த்தாவே-?’ என்றான். 20. அவர், ‘நான்... கேட்டிருக்கிறேன். இப்பொழுது - இப்பொழுது, மோசே, நான் உன்னைக் குறித்து கண்டிருக்கிறவைகளைப் பற்றி ஒரு வார்த்தையும் உன்னோடு பேசவில்லை, ஆனால் என்னுடைய ஜனங்களின் பெருமூச்சுகளைக் கேட்டிருக்கிறேன், ஆபிரகாமோடு நான் செய்து கொண்ட என்னுடைய உடன்படிக்கையை நினைவு கூர்ந்தேன். (ஆமென், வேறு வார்த்தைகளில் சொன்னால், அவருடைய வார்த்தையை) நான் ஆபிரகாமுக்குப் பண்ணின வாக்குத் தத்தத்தை நினைவு கூர்ந்தேன்’ என்றார். அவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த அதே வாக்குத்தத்தத்தை உங்களுக்கும் கொடுத்திருக்கிறார், நீங்கள் ஆபிரகாமின் வித்தாய் இருக்கிறீர்கள். அவர், ‘ஆபிரகாமோடு பண்ணின என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்து, என்னுடைய ஜனங்களை விடுவித்து, அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்பவும் அழைத்துவர இறங்கினேன், நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார். மோசே, ‘ஓ, நல்லது, என்னால்-என்னால் மிக நன்றாகப் பேச முடியாது என்று நீர் காண்கிறீரே. நான் வாக்குவல்லவன் அல்ல. என்னால்-என்னால் நன்றாகப் பேச முடியாது. நான் திக்குவாயன். நான்-என்னால்-என்னால் அதைச் செய்ய முடியாது’ என்றான். அவர், ‘நல்லது, ஆ, ஆரோன் தன்னுடைய பாதையில் இருக்கிறான், மற்றும் அதைப் போன்ற காரியங்கள் உள்ளன’ என்றார். எனவே அவர், ‘மோசே, உன் கையிலிருக்கிறது என்ன-?’ என்று கேட்டார். அவன், ‘ஒரு கோல்’ என்றான். அவனிடம் இருந்ததெல்லாம் அவ்வளவு தான், வெறுமனே ஒரு பழைய கோல், அங்கே வெளியில் அந்த வனாந்தரத்தில் எங்கேயோ இருந்து அவன் அதை எடுத்திருந்தான், அந்த இடத்தில் தான் அவன் அந்த ஆடுகளை வாசல்கள் வழியாக நடத்திச் செல்வான், அல்லது அவன் போன எங்கோ ஓரிடத்தில் அவைகளைக் கொண்டு செல்வான். அது வெறுமனே அவன் வெட்டியெடுத்த ஒரு பழைய கோலாக இருந்தது, ஏனென்றால் அது ஒரு கோல் என்று அவன் கூறினான். 21.பின்பு அவர், ‘மோசே, அதைக் கீழே போடு’ என்றார். அவன் அந்தக் கோலை கீழே எறிந்த போது, அது ஒரு சர்ப்பமாக மாறியது. அவர்... மோசே விலகி ஓடினான். அவர், ‘அதைப் பிடி’ என்றார். அவன் அதின் வாலைப் பிடித்த போது, அது மறுபடியும் ஒரு கோலாக மாறியது. மோசே, (நான்), ‘நானும் இன்றைக்கு வினோதமான காட்சிகளைக் கண்டேன்’ என்று என்னாலும் கூற முடியும் என்று நினைக்கிறேன், எனவே - அந்தக் கோல் ஒரு பாம்பாக மாறினதை அவன் கண்ட போது. இப்பொழுது, அந்தக் கோல் என்னவாக இருந்தது-? அதன் பேரில் தான் நாம் பேசப் போகிறோம். அந்தக் கோல் என்னவாக இருந்தது-? அது அதற்கு மேலும் ஒரு சாதாரண கோலாக இருக்கவில்லை. அது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாக இருந்தது. அது எதற்கு அடையாளமாக இருந்தது-? சிலுவைக்கு. அப்படியானால்... ஏன்... அது எப்படி சிலுவைக்கு அடையாளமாக இருந்தது-? ஏனென்றால் இயற்கையாக அது மரமாக இருந்தது. ஆவிக்குரிய பிரகாரமாக அது ஒரு சர்ப்பமாக இருந்தது. அந்த சர்ப்பமானது எப்படி இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது-? சர்ப்பமானது ஒரு ஊரும் பிராணியாக, ஒரு பாம்பாக இருக்கையில், அது பாவமானது ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்டாயிற்று என்பதை பிரதிநிதித்துவப்படுத்தினது. ஏதேன் தோட்டத்தில் சாத்தான் சர்ப்பத்துக்குள் இருந்து, பாவம் செய்திருந்தான். அப்போது அது ஒரு ஊரும் பிராணியாக இருக்கவில்லை, அவன், மனுஷர்களுக்கும் மிருகத்திற்கும் இடையேயுள்ள காணாமல் போன இணைப்பாக இருந்தான். அவன் நிமிர்ந்து நடப்பவனாக அங்கே நின்று கொண் டிருந்தான், அவன் சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் (ஊரும் பிராணிகளைப் பார்க்கிலும் அல்ல) அதிக தந்திரமுள்ளவனாக இருந்தான். அவன் சபிக்கப்பட்ட போது, அவனுடைய கால்கள் அவனை விட்டு போய், தன்னுடைய வயிற்றால் நகர்ந்து போனான். அவன் ஒரு ஊரும் பிராணியாக ஆன போது, அவன் ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்டவன் என்பதைத் தான் அது காண்பித்தது. 22. அப்படியானால் கிறிஸ்து ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்ட சர்ப்பத்துக்குள் இருந்த பாவம், உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக அவர் இருந்தார். உங்களுக்கு அது புரிகிறதா-? இப்பொழுது, அவன் அந்தக் கோலை எடுத்தான், அந்தக் கோலில் இருந்த இயற்கைக்கு மேம்பட்டது ஒரு சர்ப்பமாக இருந்தது. இயற்கைக்கு மேம்பட்டது யாதெனில், அது அவனுடைய கரத்தில் இருந்த ஒரு சர்ப்பமாக இருந்தது. இயற்கையாக இருந்தது என்னவென்றால், அவனுடைய கரத்திலிருந்த ஒரு கோலாகும்; சிலுவையும் கிறிஸ்துவும் சேர்ந்து அது நியாயத் தீர்ப்பாக இருக்கிறது. இதோ அவன் எகிப்திற்குப் போகிறான், நான் அநேக நேரங்களில் கூறினபடி, ‘ஒரு மனிதனின் படையெடுப்பு.’ அவனுக்கு மனைவி இருந்தாள், அவன் ஓடிச் சென்று, அவனுடைய மனைவியைத் தூக்கி, அவளைக் கோவேறு கழுதையின் மேல் உட்கார வைத்து, ஒவ்வொரு இடுப்பிலும் ஒரு பிள்ளையாக வைத்துக் கொண்டு, இதோ அவன் எகிப்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான், அவன் எகிப்தைக் கைப்பற்றிப் பிடிப்பதற்காகப் போய்க் கொண்டு இருக்கிறான். எகிப்தைக் கைப்பற்றும்படி போய்க் கொண்டிருக்கிற ஒரு மனிதனின் படையெடுப்பை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? ஆனால் அவன் அதைச் செய்தான், ஏனென்றால் அவன் அதைச் செய்வான் என்று தேவன் அவனுக்கு வாக்குப் பண்ணி இருந்தார். 23.மோசே அங்கே இருந்து, அவன் உள்ளே சென்ற போது, அவன் இந்தக் கோலை ஆறுகளுக்குக் குறுக்கே அசைத்துக் காட்டினான், அப்போது அவைகள் இரத்தமாக மாறினது. அதன் பிறகு அவன் அவைகளை வானங்களை நோக்கி அசைத்தான், அப்போது சூரியன் இருண்டு போனது. அவன் அந்தக் கோலை அவனுக்கு முன்பாக வைத்த ஒவ்வொரு இடத்திலும், அது நியாயத் தீர்ப்பாக இருந்தது. நியாயத்தீர்ப்பு அந்தக் கோலுக்கு முன்பாக போனது. ஏனென்றால் அந்தக் கோலானது நியாயத்தீர்ப்பின் கோலாக இருந்தது. உங்களுக்கு அது புரிகிறதா-? இப்பொழுது, உண்ணிகள் (fleas) அவனுக்குத் தேவைப்பட்ட போது, அவன் இந்த - இந்தக் கோலை இவ்விதமாக ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, கொஞ்சம் புழுதியை தூவி விட்டான், புழுதி பறக்கையில், உண்ணிகள் எல்லாவிடங்களிலிருந்தும் வந்தன: நியாயத்தீர்ப்பு, தெய்வீக நியாயத்தீர்ப்பு. அவன் வானத்திலிருந்து அக்கினியைக் கொண்டு வந்தான், பூமியின் மேல் மின்னல்களை வரவழைத்தான், மகத்தான ஆலங்கட்டிகளும் மற்றும் ஒவ்வொன்றும் கால்நடைகளையும் எகிப்தியர்களையும், மற்ற எல்லா வற்றையும் கொன்று போட்டன: நியாயத்தீர்ப்பு, மோசேக்கு முன்பாக தேவனுடைய நியாயத்தீர்ப்பு. 24. இப்பொழுது, மோசே தனக்கு முன்பாக அந்த நியாயத்தீர்ப்பின் கோலைக் கொண்டு போகையில், இன்றிரவும் சபைக்கான அந்த அதே கோல் யாரென்றால், அது இயேசு கிறிஸ்து தான். அந்த எகிப்தியர்களால் அந்தச் சிறிய எளிய கோலை மோசேயினுடைய கரங்களை விட்டு ஒரு போதும் எடுக்க முடியவில்லை, (அதைக்கொண்டு) அடிக்கும் அவனை அவர்கள் உடையவர்களாய் இருந்தார்கள். பிசாசினால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை விட்டு அந்த தெய்வீகத் தன்மையை எப்பொழுதாவது எடுக்க முடியும் போது, அப்போது தோற்கடிக்கப்பட்ட சபையை அவன் பெற்றுக் கொள்கிறான். ஆனால் நியாயத்தீர்ப்பின் கோலானது நியாயத் தீர்ப்பைக் கொண்டு வரும்படி அந்த நியாயத்தீர்ப்பை எடுத்துக்கொள்ளும்படிக்கு மோசேக்கு முன்பாகப் போனது போல, அவ்விதமே இயேசுவின் நாமும் நம்முடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, வியாதிக்கான நம்முடைய நியாயத் தீர்ப்புக்காக நிற்கும்படிக்கு, நமக்கு முன்பாக போகிறது; அது நம்முடைய மரண நியாயத்தீர்ப்பையும், நம்முடைய பிரச்சனையின் நியாயத் தீர்ப்பையும் எடுத்துக் கொள்கிறது. இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல், ஒவ்வொரு பிரச்சனையிலும் காக்கும் கேடயமாக, சோதனைகள் உன்னைச் சூழும் வேளையில், அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. 25. வியாதிகள் ஒன்றாக வரத் துவங்கும் போது, அந்த இயேசுவின் நாமத்தை உச்சரி. அது என்னவாக இருக்கிறது-? அது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பிரதிநிதித்துவமாய் இருக்கிறது: கிறிஸ்து ஏற்கனவே உங்களுடைய பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டு விட்டார்; கிறிஸ்து ஏற்கனவே உங்களுடைய சோதனைகளுக்காக நியாயந்தீர்க்கப்பட்டு விட்டார்; உங்களுடைய வியாதிகளுக்காக கிறிஸ்து ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டார். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா-? அது தேவனுடைய நியாயத் தீர்ப்பின் கோலாக இருக்கிறது. அந்தக் கோலை அசைக்கும் காலம் வரையில், அது நியாயத் தீர்ப்பாக இருந்தது. அந்த இரவில், மோசே, இஸ்ரவேல் புத்திரர்களை வெளியே வழி நடத்தி வந்து கொண்டிருந்த பிறகு, அங்கே பார்வோனுடைய இராணுவம் வந்து கொண்டு இருந்தது, அப்போது அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து, பார்வோனுக்கும் பின்னால் துரத்திக் கொண்டு வந்த இராணுவத்திற்கும் இஸ்ரவேலருக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருந்தது. அது இஸ்ரவேலருக்கு வெளிச்சமாகவும் பார்வோனுக்கு இருளாகவும் இருந்து, அவர்களை தூரமாக வைத்து, (ஆமென்.) இடையில் போனது. ஓ, அவர் இன்று நமக்கு இடையே போகிறவராய் இருக்கிறார் (go-between) என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வியாதியில், மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையில், அவர் என்னுடைய மத்தியஸ்தராய் இருக்கிறார். ஒரு கரத்தில் மரணத்தை ஏற்றுக்கொண்டவரும், மறுகரத்தில் ஜீவனை எடுத்துக் கொண்டவரும் அவர் தான். மனிதனை தேவனோடு இணைக்கிற இணைப்பாக, மத்தியஸ்தராக இருப்பவரும் அவர் தான். 26. அவர் ஒரு மத்தியஸ்தராக இறங்கி வந்தார். இஸ்ரவேலர்கள் அணிவகுத்துச் செல்ல இந்தப் பக்கத்தில் அவர் வெளிச்சத்தை உண்டாக்கினார், பார்வோனைத் தடுக்கும்படிக்கு அது இருளாக இருந்தது. அந்த அதே தேவனுடைய தூதனானவர் இன்றிரவு சபைக்குள் இருந்து, சபை தொடர்ந்து நடந்து போக சபைக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், அதைப் புறக்கணிக்கிறவர்களுக்கோ அது இருளாக இருந்தது. நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஆமென். நீங்கள் இருளில் நடக்கும் போது, உங்களால் எப்படி பார்க்க முடியும்-? உங்களால் பார்க்க முடியாது. நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் வெளிச்சத்தில் இருப்பீர்களானால், கிறிஸ்துவே ஒளியாக இருக்கிறார்... அவர் அவிசுவாசிகளுக்கு இருளைக் கொடுத்துக் கொண்டிருக்கையில், அந்த விசுவாசிகளுக்கோ வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் விசுவாசிகளுக்கு ஒரு பாதைக்கான வழியைக் காண்பித்துக் கொண்டிருந்த போது, அவிசுவாசிகளுக்கு இருளாகவும் இடறலாகவும் அவர் இருக்கிறார். 27. அவ்விதமே அது இன்றிரவும் இருக்கிறது. நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி அணிவகுத்துக் கொண்டிருக்கையில், தேவன் தெய்வீக சுகமளித்தல், அந்நிய பாஷைகளில் பேசுதல், சத்தமிடுதல், மற்றும் தேவனுடைய மகிமையின் பாதையின் மேல் வெளிச்சத்தைக் காட்டி, வெளிச்சத்தின் பிள்ளைகளுக்கு அவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், அவர்கள் இடறும்படியாக அங்கே பின்னால் இருளைப் போடுகிறார், அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த அதே கோலை நினைவு கூருங்கள், அந்த நியாயத் தீர்ப்பின் கோலை பிடித்திருந்த அந்தக் கரம், அவன் அங்கே வந்த போது, அங்கே தேவனுடைய பாதை இருந்து, அந்தப் பாதை சிவந்த சமுத்திரம் வழியாக போய்க் கொண்டிருந்தது, அவன் சிவந்த சமுத்திரத்தின் மேல் அதை அசைத்துக் காட்டினான், சிவந்த சமுத்திரம் நியாயத் தீர்ப்பைப் பார்த்த போது, பயப்பட்டு, இருபுறமும் பின்னிட்டுத் திரும்பி, தூணாக நின்றது. அணிவகுத்துச் சென்ற இஸ்ரவேலர்கள் சமுத்திரத்தின் அடியில் வெட்டாந்தரையில் சரியாக அதன் குறுக்கே நடந்து வந்தார்கள். 28. விருத்தசேதனம் இல்லாமல், அவர்கள் ஏதோவொன்றாக இருப்பதாக பாசாங்கு செய்து நடிக்க முயற்சித்து, அவர்கள் எதுவுமே இல்லாமல், அவ்வாறு செய்யத் துவங்கின போது, தேவன் அப்படியே அவர்களைத் தோற்கடித்து, ரதங்களிலிருந்து உருளைகள் கழலச் செய்து, குதிரைகளைப் பயப்படுத்தி, அங்கே சமுத்திரத்தின் கீழே பெரிய அளவில் குவித்துப் போட்டார். மறுகரையில், அந்த அதே நியாயத்தீர்ப்பு, அங்கே அந்தப் பள்ளத்தாக்கில் பாவம் இருந்தது... தேவனுக்கு துதி உண்டாவதாக. அது என்ன செய்யும் என்று உங்களுக்குத் தெரியுமா-? அவர்களுக்குக் காண்பித்திருந்த அந்த அதே அக்கினி ஸ்தம்பம், அது இந்தப் பள்ளத்தாக்கில் இறங்கி வந்த போது, அது அந்தத் தண்ணீருக்கு மேலே சென்று, அங்கே பின்னிட்டுத் திரும்பும்படியான ஒரு வழியை ஏற்படுத்தினது, பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் இல்லாவிட்டால், அந்த விருத்தசேதனமுள்ளவர்கள் நடந்து கொண்டிருந்த இடத்தில் நடந்திருக்க முடியாது. அல்லேலூயா. ஓ, நான் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அது என்னை பக்திபரவசமாக உணரச் செய்கிறது. 29. சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஏதோவொரு நாளில், நாம் மகத்தான பெரிய இருள் நிறைந்த பள்ளத்தாக்குகள், அல்லது பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்ட தூண்கள் வழியாக இறங்கி வர வேண்டும், அங்கே தான் நாம் ஒவ்வொரு பக்கத்திலும் அரணாக்கப்பட்டு இருக்கிறோம்; அது தான் மரண இருளின் பள்ளத்தாக்கு. தாவீது, ‘நான் ஒரு பொல்லாப்புக்கும் பயப்படேன், நீர் என்னோடு கூட இருக்கிறீர்’ என்றான். அவர்கள் அந்த மகிமையான, மகத்தான, அக்கினிஸ் தம்பத்தின் வெளிச்சத்தைக் கண்ட போது, இந்தத் தண்ணீரின் மேல் அது சுழன்று கொண்டு இருந்தது, அங்கேயுள்ள அந்த மகத்தான பெரிய பயங்கரமான மலைகளைக் கண்டனர், ஒருக்கால் அது 40 பாதம்ஸ் (fathoms) ஆழம் இருந்திருக்கலாம், அந்தச் சேறாகக் காணப்பட்ட காரியத்தில் கீழே அவ்வளவு ஆழம், கர்த்தருடைய தூதனானவர் வழிநடத்திக் கொண்டு வந்தார். தூதனானவர் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பாரென்றால், அது ஒரு வழியை உண்டாக்கிக் கொண்டிருக்கும் என்றும் வழியில் எந்த பயமும் இருக்காது என்றும் இஸ்ரவேலர்கள் அறிந்திருந்தனர். ஆமென். அப்படியானால் இந்நாட்களில் ஒன்றில், நாம் அதைப் போன்றே அந்த மரண இருளின் பள்ளத்தாக்கு வழியாக வந்தாக வேண்டும். அப்பொழுது விடிவெள்ளி நட்சத்திரம் உங்களுக்கு முன்னே தொடர்ந்து போய்க் கொண்டிருந்து, வழியைப் பிரகாசமாக்கி, உங்களை நடக்கக் கூடும்படி செய்யும் காலம் வரையில், நாம் எந்தப் பொல்லாப்புக்கும் பயப்பட மாட்டோம். மறுபக்கமானது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாக உள்ளது. ஆமென். நான் அதற்காக மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். கவனியுங்கள். அதன் பிறகு அவர்கள் மறுகரையை அடைந்த போது, இந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள், ‘நல்லது, அவர்களால் அதைச் செய்யக் கூடுமானால், நம்மாலும் அதைச் செய்ய முடியும்’ என்று கூறி, அந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போயினர், அவர்கள் குழம்பிப் போய், அந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து மூழ்கடிக்கப்பட்டு மாண்டு போயினர். 30. தொடர்ந்து அவர்கள் சென்றார்கள். ஒரு நாள் அவர்களுக்கு தண்ணீர் தேவைப்படத் தொடங்கின போது, தேவன் மோசேயிடம் கூறினார்... கூர்ந்து கவனியுங்கள். ஓ, நீங்கள் அதனுடைய இந்தப் பாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அதனுடைய தங்கக் கயிறு இதோ இருக்கிறது. அவர்கள் - ஜனங்களுக்குத் தாகமெடுத்து, ‘நாங்கள் எங்கே குடிக்கலாம்-? எங்களுடைய சிறு பிள்ளைகள் பட்டினி கிடக்கிறார்களே-?’ என்று வியந்து கொண்டு இருந்தனர். அவர்களுடைய சிறு பிள்ளைகள் வியாதிப்பட்டிருந்த போது, மோசே தன்னுடைய கரத்தில் வைத்திருந்த அந்த ஒன்றைப் போன்று, தேவன் வேறொரு அடையாளமாகிய, வேறொரு கோலாகிய ஒரு வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினார், அதைச் சுற்றிலும் ஒரு பாம்போடு கூடிய ஒரு அடையாளத்தில் மாத்திரமே அது இருந்தது. அது என்னவாக இருந்தது-? நியாயத் தீர்ப்பு. உங்களுடைய காப்பீடு பாலிசியின் பேரிலுள்ள ஈவுத் தொகைகளைப் பெற்றுக் கொள்ளுதல் (ஆமென்.), கல்வாரியில் ஈவுத்தொகையைப் பெற்றுக்கொள்ளுதல். மோசே ஏன்... இயேசு, ‘மோசே வெண்கல சர்ப்பத்தை வனாந்தரத்திலே உயர்த்தினது போல, மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்’ என்றார். 31. ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களைக் கொண்டே அவர் உயர்த்தப்பட்டார், ஏனென்றால் அவர்கள் வாதாடிக் கொண்டும், ஒருவருக்கொருவர் நெருக்கி அடித்துக் கொண்டும், ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டும், மோசையை இகழ்ந்து கொண்டும் இருந்தார்கள். அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்தார்கள், மேலும் அவர்கள் வியாதிப்பட்டும் இருந்தனர். அவைகள் இரண்டு காரணங்களுக்காக உயர்த்தப்பட்டன: பின் வாங்கிப் போனதாகிய அவர்களுடைய (பாவத்தை) மன்னிக்கவும், அவர்களுடைய வியாதிகளைச் சுகமாக்கவும். ‘நம்முடைய மீறுதல்களுக்காக அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.’ வேத வாக்கியம், அதனுடைய ஒவ்வொரு பாய்ச்சலும், ஒவ்வொரு வார்த்தையும், தேவனுடைய நித்திய வார்த்தை, அது ஒரு போதும் ஒழிந்து போக முடியாது... ஆமென். பிரதான மூலைக் கல்லாகிய இயேசு கிறிஸ்துவினாலே போடப்பட்ட அந்த அஸ்திபாரத்திற்காக நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். நம்முடைய அறிக்கையினாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலும் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்தில் கற்களாக ஒன்றாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்குள் இருந்த அதே வெளிச்சம் தான் சரியாக இந்தக்கட்டிடத்தினூடாகவும் அசைந்து கொண்டிருக்கிறது. 32. மோசேயைக் கவனியுங்கள்... இப்பொழுது, அவன் சொன்னான், அவன் வெளியே போய், ‘கர்த்தாவே, இப்பொழுது, இந்த ஜனங்கள் தாகத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்குக் கொடுக்க தண்ணீர் இல்லை, அவர்கள் என்னிடம் தண்ணீருக்காக அழுது கொண்டு இருக்கிறார்கள்’ என்று சொல்லி ஜெபித்தான். மோசேயும் ஆரோனும் கூடாரத்திற்குச் சென்று, கர்த்தருக்கு முன்பாக விழுந்தார்கள், தேவனுடைய ஷெக்கினா மகிமையானது அவர்களைச் சுற்றிலும் விழுந்தது. ஆமென். ஷெக்கினா மகிமை, தேவனுடைய பிரசன்னம் அவர்களைச் சூழ வந்தது. ஏன், சகோதரனே, தேவனுடைய ஷெக்கினா மகிமையானது உங்கள் மத்தியில் விழும் போது, நீங்கள் ஒரு நல்ல, பழைமை நாகரீகமான, பரிசுத்த ஆவி கூட்டத்தில் உணருவதைக் காட்டிலும் அதிக மேலானது அல்ல அது: அதே காரியம் தான். மோசே தன்னுடைய கரங்களை தேவனுக்கு முன்பாக உயர்த்தி, அவர்களுக்கு முன்பாக ஏறக்குறைய மறுரூபமாறினான் (transformed), தேவன், ‘மோசே, நான் உனக்கு முன்பாகப் போய், கன்மலையின் மேல் இடைவெளியில் நிற்பேன்’ என்றார். எனக்கு அது பிடிக்கும். ‘நான் உனக்கு முன்னே போய், உனக்கு ஒரு வழியை அருளுவதற்காக கன்மலையின் மேல் நிற்பேன். நீ வரும் போது, அந்தக் கன்மலையை அடி. இப்பொழுது, கோலை எடுத்துக் கொண்டு, ஜனங்களைக் கூட்டி, அங்கு போய், இந்தக் கன்மலையை அடி, அது கன்மலையில் இருந்து தண்ணீர்களைப் புறப்படச் செய்யும்.’ ஓ, என்னே. ‘நான் உனக்கு முன்னே கன்மலையின் மேல் நிற்பேன்.’ கவனியுங்கள். மோசே காத்திருக்க வேண்டியிருந்தது. தேவன் மோசேக்கு முன்னே போய் கன்மலையின் மேல் நின்றார். இதற்கான ஆவிக்குரிய அர்த்தத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தையானது திறக்கப்படுவதை நாம் காணும் போது, நீங்கள் அப்படியே-அப்படியே, உங்களால் அதில் ஸ்நானம் செய்ய (bathe) முடியும். என்னால் அது கூடும், உங்களாலும் அது கூடும் என்பது எனக்குத் தெரியும். 33. அப்போது, அங்கே, மோசே, அந்தக் கோலை, நியாயத்தீர்ப்பின் கோலை எடுத்து, அந்தக் கன்மலையிடம் புறப்பட்டுச் சென்று, அங்கே அந்தக் கன்மலையின் மேல் தேவன் நின்று கொண்டிருந்தார். அவன் அந்தக் கன்மலையை அடித்தான். அவன் அவ்வாறு செய்த போது, தண்ணீர்கள் பீறிட்டு, வேகமாய் பாய்ந்தது, கொஞ்ச தண்ணீர்கள் அல்ல, ஓவியன் அந்தப் படத்தை வரைந்திருப்பதை நீங்கள் கண்டிருப்பதைப் போன்று சிறிய ஓடை அல்ல. எனக்குத் தாகமாயிருந்தால், என்னால் குடிக்க முடிந்தும், அந்தக் காரியம் உலர்ந்து விடும். ஆனால் கவனியுங்கள். 20 இலட்சம் ஜனங்களுக்கும், அதோடுகூட அவர்களிடம் இருந்த ஒட்டகங்களுக்கும் மிருகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கும்படி போதுமான தண்ணீர் அதில் இருந்து வெளியே வந்தது. பீறிட்டு பீச்சியடித்தபடி பாய்ந்தது... அல்லேலூயா. இயேசு தாம் வனாந்தரத்திலிருந்த கன்மலை என்று அவர் வனாந்தரத்தில் இருக்கையில் சொன்ன போது, அதனுடைய அருமையான முன்னடையாளமாக இருந்தது. அவர் இந்த குதிரை, சிறிய கோவேறு கழுதையின் மேல் சவாரி செய்து எருசலேமுக்குள் வந்த போது, அந்நாளில் அங்கிருந்த ஜனங்கள் சத்தமிட்டதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் சத்தமிட்டுக் கொண்டு இருந்தனர், அந்த நாசரேத்தாரும், ‘ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தில் வருகிறவருக்கு ஓசன்னா’ என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். தங்களைத் தாங்களே நீதிகரித்துக்கொள்பவர்களாகிய (self-styled) அந்த விறைப்பான ஆசாரியர்களில் சிலர், ‘அவர்களைப் பேசாமலிருக்கச் செய்யும்’ என்றனர். ‘ஏன்,’ அவர், ‘இவர்கள் பேசாமலிருந்தால், கல்லுகளே உடனடியாகக் கூப்பிடும்’ என்றார். 34. கல்லுகள் என்பது என்ன-? கற்கள் அதே தண்ணீர்கள் மூலமே கழுவப்பட்டிருக்கிறது அல்லது வார்த்தையின் மூலமாக தண்ணீர் பாய்ச்சப்பட்டது. அவைகள் கூப்பிட வேண்டி இருக்கிறது. ‘இவர்கள் பேசாமலிருந்தால், கல்லுகளே உடனடியாக கூப்பிடும்’ என்றார். ஏதோ ஒன்று சம்பவித்தாக வேண்டியிருந்தது. அந்தக் கற்கள்... அதற்குப் பிறகு கவனியுங்கள், அவர்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் தேவைப்பட்ட போது, அவர்கள் செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம் என்னவென்றால், அந்தக் கன்மலையிடம் பேச வேண்டும். ஒரு நாள் அவர்களுக்கு பசியெடுத்தது, அவர்கள் வேட்டையாடப் போனார்கள், கன்மலையிலுள்ள இந்தப் பிளவில் அவர்கள் தேன் இருந்ததைக் கண்டு பிடித்தார்கள், அது அந்தப் பிளவில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பிளவு எதற்கு அடையாளமாக இருக்கிறது என்றால், கர்த்தராகிய இயேசுவின் பக்கவாட்டில் ஈட்டி பாய்ந்த தழும்பாக (spear mark) இருந்தது. கன்மலையிலுள்ள வெடிப்பு, அங்கு தான் அது அடிக்கப்பட்டது, மேலும் அங்கே உள்ளே, ஒரு கூட்டம் தேனீக்கள் வந்து, தேன் கூடு கட்டியிருந்தன. அங்கே கன்மலையில் தேன் இருந்தது. ஆமென். என்னவொரு அழகான காரியம். சிம்சோன், அவன் தன்னுடைய மனைவியை, தன்னுடைய பெண் சிநேகிதியை காணப்போய்க் கொண்டிருந்த போது, ஒரு சிங்கம் ஓடி வந்தது... சிறு வயதான மனிதன், அவன் ஏறக்குறைய அவ்வளவு பெரியவனாகவும், ஏழு சிறிய ஜடைகள் கீழே தொங்கிக் கொண்டிருக்க, சிறு வயதுள்ள பெண்மை தன்மை கொண்டவனைப் போன்று அவன் இருந்தான், எப்படி அந்த மனிதனுக்கு மிகவும் பலம் இருக்க முடிந்தது என்பதை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மகத்தான பெரிய வயதான சிங்கம் ஓடி வர, ‘நல்லது-நல்லது, இதோ பாருங்கள், என்ன வந்து கொண்டிருக்கிறது என்று’ என்றான். வெறுமனே சிறு வயதான பெண்மைத் தன்மைக் கொண்ட சிம்சோன் அங்கே நின்று கொண்டிருந்தான். அப்போது சிங்கம் ஓடி வந்தது, அது அவனுடைய அளவை விட பல மடங்கு அதிகமாயிருந்தது. அப்போது, என்ன சம்பவித்தது-? 35. சிம்சோன் ஒரு போதும் முதலிலேயே நடந்து சென்று, ‘இதோ, நான் உன்னைக் கிழித்துப் போடுகிறேன்’ என்று சொல்லவில்லை. ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் வந்தார். அது தான் அதைச் செய்தது. அவன் அங்கே திரும்பவும் உணர்ந்தவனாய், அந்த ஏழு ஜடைகள் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அது உடன்படிக்கையாக இருந்தது. அவன் ஒரு சிங்கத்தைக் குறித்து பயப்படவில்லை. மரணத்தின் முகத்திலும் அவன் அதைக் குறித்து பயப்படவில்லை. உங்களால் மறுபடியும் உணரக்கூடுமானால்... சிம்சோன் ஏழு ஜடைகள் இருப்பதை உணர்ந்து, அவன் ஒரு நசரேயனாக பிறந்திருந்தான் என்ற காரணத்தினால், அது ஒரு உடன்படிக்கை என்பதை அறிந்து கொள்ள முடியுமானால், பரிசுத்த ஆவியினால் பிறந்த ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக தேவனுடைய வல்லமையை உணர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் சத்துருவை கொன்று போடும் படியான உடன்படிக்கையாக அது இருக்கிறது என்பதை அறிய வேண்டும். அது வியாதியோ, சோதனையோ, அது எதுவாகவும் இருக்கலாம், தேவனுடைய ஆவி வரும் போது, நீங்கள் அதற்கு முன்பாக நிற்க முடியாது (அது உங்களுக்கு முன்பாக நிற்க முடியாது - மொழிபெயர்ப்பாளர்). 36. அவன் நடந்து சென்று, அந்தச் சிங்கத்தைப் பிடித்து, அந்தச் சிறு சுருள்முடி கொண்ட தலையை உடைய, அளவில் சிறியவனாகிய அவன் அந்தச் சிங்கத்தின் தாடையைப் பிடித்து, அதைக் கிழித்துப் போட்டான். அல்லேலூயா. உங்களுக்கு ஒருவர் மாத்திரமே தேவை; அவர் தான் கிறிஸ்து, அந்த உடனபடிக்கை. உங்களால் அதை உணர முடிகிறதா-? ஆமென். ஓ, என்னே. அந்த உடன்படிக்கை... அதன் பிறகு, அவன் ஒரு சின்னஞ்சிறிய வயதான முயல் அல்லது ஏதோவொன்றைப் போன்று அந்த வயதான சிங்கத்தைக் கொன்று போட்ட போது. அவன் இவ்விதமாக அதை இழுத்து அங்கம் அங்கமாகக் கிழித்து, அதனுடைய பழைய மரித்த சரீரத்தை (தூக்கி) அடித்து விட்டு, அங்கே அதன் வழியாக நடந்து போய் விட்டான். ஒரு சில நாட்களில், அவன் அதன் பக்கமாக வந்தான், அப்போது அதற்குள்ளே ஒரு தேன்கூடு கட்டியிருந்தது. அவனைக் கொன்று போடவிருந்த அந்த இறந்த சிங்கத்தின் உடலில் கட்டப்பட்டிருந்த அந்தப் பழைய தேன்கூட்டிலிருந்து அவன் எப்பொழுதும் சாப்பிட்டதிலேயே மிகவும் இனிமையான தேனைச் சாப்பிட்டான். தேவனுடைய ஆவி வந்து அவனை விடுவித்தது. 37. இன்றிரவு உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமானால், தேவனுடைய ஆவி உங்கள் மேல் அசை வாடுவதை உணர்ந்து, அந்தக் காரியத்தை கிழித்தெறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், வீட்டினுடைய நீள்சதுர மரச் சில்லோடுகளையே (shingles) அசைக்கும்படியான ஒரு சாட்சியை நீங்கள் கொண்டிருப்பீர்கள். ஆமென். பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் பண்ணப்பட்ட உடன்படிக்கையாக நீங்கள் இருக்கிறீர்கள். ஆமென். கொஞ்சம் இனிமையான தேனை சாப்பிடுங்கள், உண்மையிலேயே அது நல்லது. அவர் நின்று, ‘ஆமாம், சகோதரனே, நான் சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளேன்’ என்று கூறும் போது. ஆச்சரியமான கிருபை-! அதன் தொனி எவ்வளவு இனிமை, என்னைப் போன்ற ஈனனை அது இரட்சித்தது, நான் ஒரு காலத்தில் இழக்கப்பட்டவனாய் இருந்தேன், இப்பொழுதோ கண்டு பிடிக்கப்பட்டேன், நான் குருடனாயிருந்தேன், இப்பொழுதோ காண்கிறேன். ஆமென். 38. நான் வழக்கமாக அதைப் போன்று மகத்தான, பெரிய கண் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, கரங்களினால் பிடித்து, சுற்றிலும் வழி நடத்தப்பட வேண்டியவனாய் இருந்து, நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை பார்க்கவே கஷ்டமாக இருந்த போதும், நான் இப்பொழுது ஒரு சாட்சியை உடையவனாயிருக்கிறேன். ஏனென்றால் கிறிஸ்து இயேசுவுக்குள் என்னுடைய ஸ்தானத்தை நான் உணர்ந்து கொண்டேன். அவர் ஒரு உடன்படிக்கை செய்தார், நான் அதை ஏற்றுக்கொண்டு, அவரை விசுவாசித்தேன். இன்று அது புசிப்பதற்கு இனிமையான தேனாக இருக்கிறது. மற்றவர்களிடம் கூறுங்கள். இப்பொழுது, மறுபடியும் கவனியுங்கள், துரிதமாக. நாம் அங்கே வருவோம்... அதன் பிறகு அந்தக் கன்மலையானது அடிக்கப்பட்ட போது... மிகவும் அழகான முன்னடையாளம்... அந்த ஜனங்கள் அழிந்து கொண்டும், மரித்துக் கொண்டும் இருந்தனர். அது, ‘தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்’ என்பதற்கு ஒரு முன்னடையாளமாயிருந்தது. 39. அழிந்து கொண்டிருக்கும், மரித்துக் கொண்டிருக்கும், ஜனங்களின் மத்தியில், அழிந்து, மரித்துக் கொண்டிருக்கும் தேசத்தின் மத்தியில், தேவன் தகுதியற்றவர்களிடத்தில் மிகவுமாக அன்பு கூர்ந்தார். அவர்கள் எவ்வளவு அபாத்திரராய் இருந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். தேவன் மிகவும் அன்பு கூர்ந்தார்... ஓ, அது தேவனுடைய அன்பாக இல்லாதிருக்குமானால், இன்றிரவே அவர் முழு உலகத்தையும் அழித்துப் போட்டிருப்பார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியாது. அதைச் செய்யும்படி அவருடைய அன்பு அவரை அனுமதிக்காது. எனவே, ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், ஜீவத்தண்ணீர்களை இலவசமாய்ப் பருக முடியும்படிக்கு, அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். விருப்பமுள்ளவன் எவனோ வரக்கடவன்.’ அது போதுமானது, அபரிமிதமான ஆசீர்வாதங்கள் ஊற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ‘என் இடத்தில் விசுவாசமாயிருக்கிறவன்...’ வேறு வார்த்தைகளில் சொன்னால், இதைப் போன்று, ‘என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனுடைய ஆத்துமாவின் மத்தியிலே மகத்தான, பெரும் வெள்ளத்தை உடையவனாய், நித்திய ஜீவனுக்குள் பொங்கி வழிந்தோடும்’ என்ற விதமாய் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஓ, என்னவொரு அழகான காரியம். 40. தேவன் மரண நியாயத்தீர்ப்பு எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார் என்பதைக் கவனியுங்கள். நான் மரிக்க வேண்டிய மரணம், நான் போக வேண்டிய நரகம், மரணம் மற்றும் வியாதியாகிய அவருடைய நியாயத் தீர்ப்புகளோடு, கிறிஸ்து அவரை இடைவெளியில் (gap) சந்தித்து, வானங்களுக்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருந்தார். தேவன் நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் சுமத்தினார். அங்கே தான் நியாயத்தீர்ப்பு அடிக்கப்பட்டது. இன்றிரவு சிலுவையாகிய அந்த அதிகாரச் சின்னம், உலகத்தை மூடிக் கொண்டிருக்கும் மூடி, ஆனால் தங்களுக்கு முன்பாக சிலுவைப் போய்க் கொண்டிருக்க அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கிறவர்களுக்கோ, நியாயத் தீர்ப்புகள் செலுத்தப்பட்டாயிற்று. நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள், என் சகோதரனே, பிழைத்துக்கொள். இயேசுவை நோக்கிப் பார்த்து, இப்பொழுதே பிழைத்துக்கொள். அது அவருடைய வார்த்தையில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது, அல்லேலூயா, ஒரே காரியம் தான், நாம் நோக்கிப் பார்த்து, பிழைத்துக்கொள்வோம். 41. நீங்கள் வியாதிப்பட்டு இருந்தால், நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனச்சோர்வு அடைந்திருந்தால், நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் களைப்புற்றிருந்தால், நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாவத்திலும் மீறுதல்களிலும் மரித்துப் போயிருந்தால், நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். சிலுவை நமக்கு முன்னால் சென்று கொண்டிருக்கிறது. தேவன் இந்த அதிகார சின்னத்தை நமக்கு முன்பாக வைத்திருக்கிறார், அது தான் சிலுவை, அதன் வழியாக வருகிறவர்கள் உணர்ந்து கொள்வார்கள்... அந்த சர்ப்பத்தைப் போன்று, அது கோல் அல்ல; அங்கே பரிகாரம் செய்யப்பட்டதை பிரதிநிதித்துவப்படுத்தின சர்ப்பமாக அது இருந்தது. அது நாம் சுமந்து செல்கிற ஒரு மரச்சிலுவை அல்ல; கிறிஸ்துவுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியின் ஜீவன் அவரை விட்டு வந்த போது, அதோ அங்குள்ள அந்த-அந்த மகத்தான அடையாளத்திற்குள், கல்வாரியின் அதிகாரச் சின்னத்திற்குள் பொதியப்பட்ட பரிசுத்த ஆவியாக அது இருக்கிறது. இந்த சிலுவையிலிருந்து ‘யாராயிருந்தாலும் வரலாம்’ என்பதற்கு அது போனது. இன்றிரவு சிலுவையானது இயேசுவைப் பின்பற்றும்படிக்கு நமக்கு முன்பாக இருக்கும் தேவனுடைய அடையாளமாக உள்ளது. என்னே. 42. அங்கே அந்தக் கன்மலையின் மேல் நின்று கொண்டிருந்த தேவனைக் குறித்து நான் எண்ணிப் பார்க்கிறேன். தேவனே அந்தக் கன்மலையாய் இருந்தார், மேலும் மோசேயினுடைய நியாயத் தீர்ப்பின் கோலானது... நியாயத்தீர்ப்பு, தேவனுடைய நியாயத் தீர்ப்பானது கிறிஸ்துவை அடித்து, நமக்குப் பதிலாக அவர் மரித்துக் கொண்டிருந்தார், குற்றம் உள்ளவர்களுக்காக குற்றமற்றவராக மரித்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து இரத்த அணுக்கள் வந்தன. ஜீவனைக் கொடுக்கும் இரத்தமானது, நம்மைச் சுகமாக்கும் படிக்கு அவருடைய முதுகிலிருந்து பாய்ந்தது, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு அது அவருடைய இருதயத்தில் இருந்து பாய்ந்தது; அது அவருடைய புருவங்களில் இருந்தும் மற்றும் காரியங்களிலிருந்தும் கீழே பாய்ந்தது, நம்முடைய அக்கிரமங்களுக்காகவும், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணுவதற்காகவும், மற்றும் எல்லாவற்றிற்காகவும் அது, அவர் மேல் இருந்தது. அங்கே அவர் ஒரு இரத்தம் சிந்தும் குற்றவாளியாக இருந்து, வானங்களுக்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டு, நின்று கொண்டிருந்தார், அங்கே பரிசுத்த தேவன் கீழே நோக்கிப் பார்த்து, அவரால் அதற்கு மேலும் பாவியைப் பார்க்க முடியவில்லை, அதோ அங்கே கிரயம் செலுத்தப்பட்டிருந்த அந்த நியாயத் தீர்ப்பினூடாக அவர் நோக்கிப் பார்த்தார், முழு உச்ச உயர்வான அந்தக் கிரயம் செலுத்தப்பட்டிருந்தது. ஓ, என்னுடைய கிறிஸ்தவ நண்பனே, நீ அதைக் காண்கிறாய் என்று நம்புகிறேன். 43. அதோ அங்கே நோக்கிப் பார்த்த போது, அதோ அது இருக்கிறது. தேவனுடைய பார்வையில், அது முடிந்து விட்டது. கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. நீங்கள் விடுதலை அடைந்து விட்டீர்கள். இன்றிரவு ஜனங்களோடுள்ள தொல்லை அது தான். அவர்கள் விடுதலையாய் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு வயதான விவசாயிக்கு ஒரு-ஒரு சோள வயல் உண்டாயிருந்தது. அவனுடைய சோளத்தை புசிப்பதற்காக காகங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன, எனவே அவன் ஒரு கண்ணியை வைத்து, ஒரு காகத்தைப் பிடித்தான். அவன், ‘நான் மற்ற காகங்களை அழைப்பேன்’ என்று கூறி, அந்த ஒன்றை அதனுடைய காலை வேலியோடு கட்டி விட்டான், அந்த பரிதாபத்திற்குரிய வயது சென்ற காகம் நொண்டி நொண்டி நடந்து, துள்ளிப் பார்த்தது, மேலும் நொண்டி நொண்டி, துள்ளியது, அது கட்டப்பட்டு இருந்ததால் அதனால் அங்கிருந்து போக முடியவில்லை. அது பட்டினி கிடந்தது, அதற்கு எட்டும் தூரம் வரையில் சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டது. அது பட்டினியால் மரித்துக் கொண்டு இருந்தது. எனவே அதனால் அதற்கு மேலும் பறப்பதோ அல்லது மேலும் கீழும் குதிப்பதோ கஷ்டமாக இருந்தது. 44. மற்ற எல்லா காகங்களும் அதற்கு அருகில் வந்து சத்தமிட்டு, ‘ஜானி காகமே, வந்து விடு. நாங்கள் தெற்குக்குப் போகிறோம். குளிர் காலம் வந்து கொண்டிருக்கிறது. அங்கேயே இருந்தால் நீ மரித்து விடுவாய். ஜானி, காகமே நாம் போய் விடலாம்’ என்றன. அதுவோ, ‘என்னால் முடியாது. நான் கட்டப்பட்டு இருக்கிறேன்’ என்றது. ஒரு நாள் ஒரு நல்ல மனிதன் அதன் அருகில் வந்தான். ‘பாவம், இந்த வயதான காகம். இதைப் பாருங்கள், அது அங்கே சுற்றிலும் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருக்கிறது. அது பலவீனமடைந்து வருகிறது’ என்று கூறினான். இப்படியிருக்க அவன் அந்த வயதான காகத்தைப் பிடித்து, சற்று செல்லமாக நடத்தி, அந்தப் பூட்டை இவ்விதமாக அதனுடைய காலை விட்டு எடுத்து விட்டு, அதனை விடுவித்து, ‘சரி, வயதான பையனே, போய் விடு’ என்றான். அவன் அங்கிருந்து போய் விட்டான். அந்த வயதான காகமோ தொடர்ந்து அதே வட்டத்தில் - அதே வட்டத்தில் சுற்றிச்சுற்றி நடந்து கொண்டே இருந்தது. பாருங்கள்-? அது கட்டவிழ்க்கப்-பட்டு இருந்தும் அதற்கு அது தெரியவில்லை. மற்ற காகங்கள் அதற்கு அருகில் வந்து, ‘ஜானி காகமே, வந்து விடு. நாம் தெற்குக்குப் போய் விடுவோம். குளிர்காலம் வருகிறது’ என்றன. அதுவோ, ‘என்னால் முடியாது. நான் இன்னும் கட்டப்பட்டு இருக்கிறேன்’ என்றது. 45. இன்றிரவு கிறிஸ்து இயேசுவுக்குள் தங்கள் ஸ்தானத்தை அறிந்திராத மனிதர்களோடும் பெண்களோடும் உள்ள (காரியம்) அந்தவிதமாகத் தான் இருக்கிறது. பிசாசு உங்களை காச நோயினாலோ, புற்று நோயினாலோ, அநேக காரியங்களினாலோ கட்டி வைத்திருக்கலாம். ஆனால் அந்த நல்ல மனிதராகிய கிறிஸ்து உங்களுக்குடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டார், அவர் இப்பொழுது இன்றிரவிலே உங்களை விடுதலையாக்கியிருக்கிறார். தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. உங்களால் பரிசுத்த ஆவியின் வல்லமையில் எழும்ப முடியும். நாம் தெற்குக்குப் போகவில்லை, ஆனால் நாம் ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான இராணுவமாக மகிமையை நோக்கி அணிவகுத்துப் போகிறோம். நாம் விடுதலை அடைந்து இருக்கிறோம். மற்றவர்கள், ‘வாருங்கள்’ என்று கூறிக் கொண்டிருப்பதை உங்களால் கேட்க முடியவில்லையா-? நான் ஒரு காலத்தில் பாவ சங்கிலியினால் கட்டப்பட்டிருந்தேன், ஆனால் இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் மூலமாக கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறேன். ஆமென். 46. நியாயத்தீர்ப்பு, நிச்சயமாகவே, கிறிஸ்து நம்முடைய நியாயத்தீர்பை ஏற்றுக் கொண்டார், குற்றம் உள்ளவர்களுக்காக குற்றமற்றவராக அதை ஏற்றுக் கொண்டு விட்டார். நாம் பாவிகளாக இருக்க வேண்டாம் என்பதற்காக அவர் பாவமானார். அவர் ஆனார்- - நம்முடைய வியாதிகளை சுமந்து கொண்டார், நாம் அதைச் சுமக்க வேண்டியதில்லை. நாம் இனி மேலும் துக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டாமென்று, ‘மற்றவர்களைப் போல, நாமும் நம்பிக்கை அற்றவர்களாய் இராதபடிக்கு’ என்று வேத வாக்கியம் கூறுகிறபடி அவர் நம்முடைய துக்கங்களைச் சுமந்து கொண்டார். அவர்... நமக்கு அவசியமாயிருப்பது எல்லாம் சரியாக அவருக்குள் இருந்தது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நிச்சயமாக. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டியே, உங்களுடைய இருதயக்கோளாறுக்காக நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அந்த இருதய நிலைக்காக நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாகவே அதை ஏற்றுக் கொள்கிறீர்களா-? அப்படியானால் அவர் உங்கள் இருதயக் கோளாறை சுமந்து கொண்டார்; இப்பொழுது இன்னுமாக நீங்கள் அதை வைத்திருக்க வேண்டாம். ஆமென். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், உங்களால் அதைக் கொண்டிருக்க முடியும். அல்லேலூயா. ஆம், ஐயா. 47. ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்.’ அவர் - அந்தக் கன்மலை ஒரு முறை அடிக்கப்பட்ட பிறகு, தேவன் மோசேயிடம், ‘மோசே, நீ போய், இப்பொழுது நீ செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், போய் அந்தக் கன்மலையைப் பார்த்துப் பேச வேண்டியது தான். இதுமுதற் கொண்டு, உனக்குத் தண்ணீர் தேவைப்படும் ஒவ்வொரு தடவையும், அதைப் பார்த்து பேசு. இனி மேலும் நீ அதை அடிக்க வேண்டியது இல்லை. நீ முழு இரவும் அடித்துக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் கவலைப்படவோ, பிச்சையெடுக்கவோ, ஜெபிக்கவோ, உபவாசிக்கவோ, மற்றும் அவைகளைத் தொடர்ந்து செய்யவோ வேண்டியது இல்லை. வெறுமனே அந்தக் கன்மலையைப் பார்த்து பேசுங்கள் (அல்லேலூயா.) அது அவருடைய தண்ணீர்களைக் கொடுக்கும்’ என்றார். ஆமென். ‘கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள், அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொண்டு வரும்.’ நான் உங்களுக்குக் கூறுகிறேன்; ஒருமுறை பெரும்பாடுள்ள ஒரு பெண் அங்கே இருந்தாள், அவளுக்கு இருந்த எல்லாவற்றையும் அவள் இழந்து விட்டாள். எந்த மருத்துவராலும் அவளைச் சுகப்படுத்த முடியவில்லை. ஒரு நாள் அவள் அந்தக் கரை நெடுக கீழே வந்து கொண்டிருந்த போது, அந்த ஆவிக்குரிய கன்மலை உருண்டு வந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள், அப்போது அவள் அந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசினாள். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, இந்த ஸ்திரீ இங்கே செய்தது போன்று, அந்தக் கன்மலையைப் பார்த்து பேசின போது, அந்தக் கன்மலையிலிருந்து சுகமளிக்கும் தண்ணீர் வந்தது. அல்லேலூயா. 48. அங்கே உண்மையாகவே கர்த்தரை நேசித்த யவீரு என்ற பெயருடைய ஒரு சிறு வயதான மனிதன் இருந்தான், ஆனால் அவன் இரகசியமாக ஆராதிக்கிற ஒருவனாக இருந்தான். ஒரு நாள், அவனுடைய சிறு பெண் பிள்ளை மரித்தாள். எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று, ஆனால் அவன் அந்தக் கன்மலையைப் பார்த்து பேசின போது, அந்தக் கன்மலை தண்ணீரை மாத்திரம் கொடுக்கவில்லை, ஆனால் ஜீவனையும் கொடுத்தது, ஜீவத் தண்ணீரை இலவசமாகக் கொடுத்தது. வேறொரு ஸ்திரீ, மார்த்தாள் மரியாள் என்ற பெயருடைய, அவர்கள் அவரை நேசித்தார்கள். அவர் அவர்களுடைய வீட்டிலிருந்து போய் விட்டிருந்தார். அவர்களுடைய சகோதரன் மரித்து, அங்கே வெளியே கல்லறையில் அழுகிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்தக் கன்மலை வந்து கொண்டு இருப்பதை, அந்தக் கன்மலை அந்தப் பட்டணத்திற்கு உருண்டு வந்து கொண்டு இருப்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள். மார்த்தாள் அவருக்காக நல்ல இரவு உணவுகளை சமைப்பதைக் குறித்தும் மற்றும் காரியங்களைக் குறித்தும் நேரத்தை மிகவும் வீணாக்கிக் கொண்டிருந்தாள், அவள் ஒருக்கால் அந்த ஆவிக்குரியதற்கு மிக அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அவளுடைய இருதயத்திலோ அவள் அதை விசுவாசித்தாள். அவள் எப்படிப்பட்டவளாய் இருந்தாள் என்பதை அப்போது காண்பித்தாள். அவள் ஓடிச் சென்று, முழங்கால்படியிட்டு, அவள் அந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசினாள். அந்தக் கன்மலையானது, திரும்பி வந்து, நித்தியத்திற்குள் பேசி, மரித்துப் போன ஒரு மனிதனை அவனுடைய கல்லறையை விட்டு உயிரோடெழுப்பினது. அல்லேலூயா 49. ஒரு இரவில் ஒரு கூட்டம் ஜனங்கள் வெளியே ஒரு சிறு பழைய படகில் இருந்த போது, அது ஒரு பாட்டில் மூடியைப் போன்று சுற்றிலும் போய்க் கொண்டு, ஒவ்வொரு இடத்திலும் குதித்துக் கொண்டும், சென்று கொண்டு இருந்தது, அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற எல்லா நம்பிக்கையும் அற்றுப் போய் விட்டது. அந்தப் படகின் முகப்பில் அந்தக் கன்மலை படுத்துக் கொண்டு இருந்ததை அவர்கள் உணரநேர்ந்தது. அப்போது அவர்களுடைய பிரச்சனைகளைக் குறித்து அவர்கள் அந்தக் கன்மலையிடம் பேசினார்கள், அப்போது அது அமர்ந்து, காற்றுகள் தங்கள் கைகளை மடக்கிக் கொண்டு பிளவுகளுக்குள் போய் விட்டது. அல்லேலூயா. கொந்தளித்துக் கொண்டிருந்த கடலானது, ஒரு தாயானவள் தன்னுடைய குழந்தைக்கு தாலாட்டுப் பாடுவதைப் போன்று, அமர்ந்து விட்டது. அவள்... அவர்கள் அந்த கன்மலையைப் பார்த்துப் பேசினார்கள், அவர்கள் கேட்ட பொருளை அந்தக் கன்மலை கொடுத்தது. நீங்கள் இன்றிரவு அவரைப் பார்த்து வார்த்தைகளைப் பேசுவீர்களா-? அங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பவரே, உங்களுடைய நெஞ்சு - நெஞ்சு வலியைக் குறித்து அவரிடம் உங்களால் பேச முடியுமா-? தேவன் உங்களை சுகமாக்கி விட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீர் அவரிடம் பேசி முடித்து விட்டீர், இல்லையா-? நீங்கள், ‘கர்த்தாவே, என்னைச் சுகப்படுத்தும்’ என்று கூறவில்லையா-? நீர் அவரிடம் பேசினீர், இப்பொழுது உம்முடைய நெஞ்சு வேதனை போய் விட்டது. ‘இந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள். அவர் தம்மிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுப்பார்.’ அல்லேலூயா. 50. மோசே, அவனுடைய நேரம் வந்து, எல்லா காரியங்களும் தோல்வி அடைந்திருந்த போது, தேவன், ‘மேலே வா’ என்றார், அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நோக்கிப் பார்ப்பதற்காக நேபோ மலையின் உச்சிக்கு ஏறிச் சென்றான். அங்கே மரணமானது வானத்தினூடாக சுழன்று வந்து கொண்டிருந்தது. மரணமானது அவனைச் சுற்றி முழுவதும் இருந்ததை அவன் அறிந்து கொண்டான். மோசே சுற்றும் முற்றும் பார்த்து, அவன் நோக்கின போது, அங்கே அவனுடைய பக்கவாட்டுக்கு அருகில் அந்தக் கன்மலை இருந்தது. அவன் அந்தக் கன்மலையின் மேல் ஏறினான். அவன் அந்த வனாந்தரம் முழுவதும் அதைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், அல்லது அது அவனைப் பின் தொடர்ந்து வந்திருந்தது. அவன் அந்தக் கன்மலையை விட்டு போன போது, தேவன் சவப்பெட்டி தூக்குபவர்களில் சிலரை, தூதர்களை அனுப்பி, அவனை அந்தக் கன்மலையை விட்டு சுமந்து கொண்டு போனார். அல்லேலூயா. அவனுக்கு பசியாயிருந்த போது, அந்தக் கன்மலை அவனைப் போஷித்து இருந்தது, அவனுக்குத் தாகமாயிருந்த போது, அது அவனுக்குத் தண்ணீர் கொடுத்திருந்தது, மேலும் அவன் மரித்துக் கொண்டிருந்த போது-? அது அவனை மகிமையிலுள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்றது. 51. இன்றிரவு என்னுடைய ஜெபம் என்னவென்றால், ‘கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மோடு வார்த்தைகளைப் பேசக்கூடும் அளவுக்கு இங்கேயுள்ள இந்த உலகப்பிரகாரமான பாகத்திற்கு மேலாக என்னை இழுத்துக் கொள்ளும். ஏதோவொரு நாளில், நான் மரண இருளின் பள்ளத்தாக்கு வழியாகப் போகும் போது, அந்தக் கன்மலை அங்கே நின்று கொண்டு இருப்பதைக் காண நான் எதிர்பார்க்கிறேன்’ என்பதே. அல்லேலூயா. ‘அவரோடு வார்த்தை- களைப் பேசும்படிக்கு என்னை வைத்தருளும்.’ நான், நானே அவரிடம் பேச விரும்புகிறேன். அவரிடம் பேசுவது தான் உங்களுக்கு அவசியமாயுள்ளது. அவர் இன்றிரவு இங்கே இருக்கிறார், அவரிடம் பேச நீங்கள் விரும்புவீர்களானால், உங்கள் ஒவ்வொருவரோடும் வார்த்தைகளை அவர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும், இப்பொழுது இந்நேரத்தில் நம்முடைய காலூன்றி எழுந்து நிற்போம். ஓ, என்னே. ஓ, இந்த சபையையே என்னுடைய தோள்களின் மேல் வைத்து, அதை வைத்துக் கொண்டே தூரமாக நடந்து போக என்னால் முடியும் என்பது போன்று உணருகிறேன். என்ன-? கன்மலையாகிய கிறிஸ்து இயேசு இங்கே இருக்கிறார். 52. ஓ, நான் உணர்ச்சி வசப்படவில்லை. நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பதை சரியாக அறிவேன். நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்பதையும் முற்றிலும் அறிவேன். ஓ, என்னால் மாத்திரம் என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமானால். கிறிஸ்து இயேசுவாகிய இந்தக் கன்மலையின் அபிஷேகத்தின் கீழாக இருப்பதென்பது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை இந்தக் கூட்டத்தினருக்கு மாத்திரம் என்னால் கூற முடியுமானால். உங்களுடைய நியாயத் தீர்ப்பு ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று, உங்களுடைய வியாதிகள் சுமக்கப்பட்டாயிற்று, உங்களுடைய துக்கம் எடுக்கப்பட்டாயிற்று, தேவனுக்கு முன்பாக கேள்வி தீர்க்கப்பட்டு விட்டது. அவர் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்க பயப்படுகிறீர்களா-? நீங்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டியது இல்லை. நீங்கள் பாத்திரவான்களா என்று உங்களை நீங்களே சிந்தித்துப் பார்க்க வேண்டியது இல்லை; நீங்கள் ஒருபோதும் பாத்திரவான்களாக இருப்பதில்லை. ஆனால் உங்களுக்குப் பதிலாக கிரயத்தைச் செலுத்தின கிறிஸ்து பாத்திரராயிருக்கிறார். ஏதோவொன்றை விடுவிக்க முயற்சிப்பதல்ல, உங்களால் அதை விடுவிக்க முடியாது, ஏனென்றால் அதற்கு உங்களிடம் பணமில்லை. ஆனால் தேவனிடம் பணமிருந்தது, அவர் கிறிஸ்துவை அனுப்பி, கணக்கை முடித்து, உங்களுடைய வியாதிகளிலிருந்தும், உங்களுடைய துக்கங்களிலிருந்தும், உங்களுடைய கவலையில் இருந்தும், உங்களுடைய பாவத்திலிருந்தும், உங்களுடைய பின் வாங்குதலிலிருந்தும் உங்களை விடுவித்து விட்டார். அவர் கிறிஸ்து இயேசுவாயிருந்த பணத்தை அனுப்பி, அதை கொல்கதா மலையின் மேல், கல்வாரியில் வைப்புநிதியாக வைத்திருக்கிறார். நீங்கள் வெறுமனே அதை விசுவாசிப்பீர்களானால், இன்றிரவு நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலையாய் இருக்கிறீர்கள். 53. ஓ தேவனாகிய கிறிஸ்துவே, வயதான மோசேயைப் போல, நான் உம்மோடு பேசுகிறேன், வியாதிகளோடும், தொல்லைகளோடும் அழிந்து கொண்டிருக்கும் இந்த ஜனங்களின் நன்மைக்காக நான் உம்மிடம் பேசுகிறேன். ஓ நித்திய தேவனே, கர்த்தாவே, நித்தியமான மலைகளிலிருந்து, உம்முடைய தலையை உயர்த்தி, இந்த ஜனங்களை உமது இராஜ்யத்திற்குள் ஏற்றுக் கொள்ளும், ஏற்று... கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றிரவு இந்த ஜனங்களை மிகவுமாக அபிஷேகித்து, அவர்கள் சிம்சோன், தான் உடன் படிக்கையின் தலைமயிரை உணர்ந்த போது செய்தது போன்று தங்கள் உடன்படிக்கையை உணருவார்களாக. இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் தாமே, நீர் ஜனங்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையை அவர்கள் உணரும் அளவுக்கு ஒவ்வொரு இருதயத்தையும் சுற்றி மூடுவாராக, அப்பொழுது அவர்கள் போய் விடுதலையோடு இருக்கலாம். நான் ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு நோயையும், ஒவ்வொரு பாவத்தையும் கண்டனம் செய்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனாக நான் இதைச் கூறுகிறேன், தாழ்மையான வார்த்தையோடு நான் இதை உம்மிடம் கூறுகிறேன், ஆனால் கசப்பான கடிந்து கொள்ளுதலை பிசாசுக்கு முன்பாக வைத்து, ‘சாத்தானே, நீ யுத்தத்தில் தோற்று விட்டாய். அதோடு கூட நீ அதை விட்டு கொடுத்தே ஆக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இங்கேயுள்ள ஒவ்வொரு நபரையும் விட்டு வெளியே வா, அவர்கள் விடுதலையடையட்டும்’ என்று (கூறுகிறேன்). ஆமென். *******